For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமக தொகுதிகளில் அதிமுக, பாஜகவுக்கு ரஜினி பகிரங்க ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்குமாறு தனதுரசிகர் மன்றங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளதாக, ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயண ராவ்பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

பாமகவுக்கு எதிராக பகிரங்கமாக தேர்தல் களத்தில் குதிக்கிறார் ரஜினிகாந்த். இருப்பினும் அவர் நேரடியாகபிரசாரத்தில் ஈடுபட மாட்டார் என்றே தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, ரஜினியின் வலதுகரம் என்று கூறப்படும் ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயண ராவ் புதுவையில் அறிவித்தார்.

புதுவையில், ரஜினி ரசிகர் மன்ற செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம்சத்யநாராயண ராவ் பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் புதுவை உள்ளிட்ட 6 தொகுதிகளிலும்அக்கட்சியை எதிர்ப்பது என ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். இந்த 6 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுகமற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு என் மூலம் உத்தரவுபிறப்பித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பதில் ரஜினிக்கு எந்தவித தயக்கமும் இல்லை. டாக்டர் ராமதாஸைப் போலஅதிமுக தலைவர்கள் யாரும் ரஜினியை விமர்சித்தது கிடையாது. எனவே அவர்களை ஆதரிப்பதில் ரஜினிரசிகர்களுக்கும் தயக்கம் இல்லை.

பாபா படம் வெளியானபோது நடந்த கசப்பான சம்பவங்களை ரஜினியும் சரி, ரசிகர்களும் சரி இன்னும்மறக்கவில்லை. ரஜினியைப் பற்றியும், ரஜினிகாந்த்தின் குணங்களை விமர்சித்தும் டாக்டர் ராமதாஸ் மிகவும்கொச்சைப்படுத்தி பேசியதையடுத்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்களது ராமதாஸ் எதிர்ப்பு உணர்வை, ஜனநாயக ரீதியாக, பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் ரஜினிரசிகர்கள் காட்டுவார்கள். அதாவது, 6 தொகுதிகளும் அதிமுக, பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வார்கள். நானும் இங்கு பிரசாரம் மேற்கொள்வேன்.

ரஜினி ரசிகர்களின் செயல்பாடுகளுக்கு எப்போது அதிமுக தடையாக இருந்ததில்லை. பாபா விவகாரத்தின்போதுகூட அதிமுக ஆட்சியின் கீழ் உள்ள காவல்துறை துரித கதியில் செயல்பட்டு கலாட்டா செய்தவர்களை ஒடுக்கியது,கடத்தப்பட்ட பாபா படப் பெட்டிகளை உடனுக்குடன் பறிமுதல் செய்து வந்தது.

ஆனால், ரஜினியையும், ரசிகர்களையும் முட்டாள்கள் என்று கூறும் அளவுக்கு தரம் தாழ்ந்து பேசியுள்ளார்ராமதாஸ். இதை நாங்கள் மன்னிக்கவே முடியாது என்றார் சத்யநாராயண ராவ்.

பின்னர் ரசிகர்கள் மன்ற கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை சத்யநாராயண ராவ்ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது பாபா ஸ்டைலில் கை விரல்களைக் காட்டி ரசிகர்களைகுஷிப்படுத்தினார் லலிதா.

ரஜினிகாந்த் ஆதரவு அளிக்கும் 6 தொகுதிகளில், திண்டிவனம், செங்கல்பட்டு, அரக்கோணம் ஆகியவற்றில்அதிமுகவும், புதுவை, சிதம்பரம், தர்மபுரி தொகுதிகளில் பா.ஜ.கவும் போட்டியிடுகின்றன.

தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை இன்னும் சில நாட்களில் ரஜினிகாந்த்தேஅதிகாரப்பூர்வமாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அறிவிப்பார் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X