For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதல் தோல்வி: 218 அடி கோபுரத்தில் இருந்து குதித்த வாலிபர்!

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சை:

தன்னுடன் காதலியை சேர்த்து வைக்கக் கோரி வாலிபர் ஒருவர் 218 அடி உயர போலீஸ் தொலைத் தொடர்புகோபுரத்தில் இருந்து குதித்தார். அவரை நடு வழியிலேயே பிடித்து அவரது உயிரைக் காப்பாற்றினார் கூலித்தொழிலாளி ஒருவர்.

கோவை மாவட்டம் மருதமலை ரோடு பகுதியில் வசித்து வருபவர் நரசிம்மன். இவர் ஒரு எலக்ட்ரீசியன். இவர்தனது வீட்டின் அருகே வசிக்கும் ராஜசேகர் என்பவரின் மகளை ஒரு தலையாகக் காதலித்து வந்தார்.

இந் நிலையில் அவர் காதலித்த பெண்ணை தஞ்சையியிலுள்ள பாட்டி வீட்டுக்கு அழைத்து வந்து வேறு ஒருவருக்குத்திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதையறிந்த நரசிம்மன் தஞ்சைக்கு வந்தார்.

தஞ்சை கிழக்கு பகுதி போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள 218 அடி உயர வயர்லெஸ் டவர் உள்ளது. அந்த டவரில்ஏறி நரசிம்மன் உச்சிக்குப் போனார். அங்கிருந்தபடி கீழே நடந்து சென்றவர்களை சத்தம் போட்டு அழைத்து, நான்கீழே குதித்து சாகப் போகிறேன் என்றார்.

உடனே போலீசார் ஓடி வந்து சமாதானம் செய்ய முயன்றனர். இதற்குள் அங்கு 500க்கும் மேற்பட்டவர்கள்குவிந்தனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணைக் கண்காணிப்பாளர் உமா ஆகியோரும் அங்கு வந்தனர்.எதற்காக தற்கொலை செய்யப் போகிறீர்கள்? என்று அவர்கள் கேட்டபோது,

நான் காதலித்த பெண்ணுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணமாகி விட்டதாக சிலர் கூறினார்கள். நான்காதலித்த பெண் என்னை ஏமாற்றமாட்டாள் என நம்புகிறேன். எனவே கீழே உள்ள நீங்கள் அந்த பெண்ணைஅழைத்து வந்து எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். மறுத்தால் நான் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டத் தொடங்கினார்.

போலீசார் மிரட்டினார்கள், பின்னர் கெஞ்சினார்கள். 1 மணி நேர பேச்சுவார்த்தையில் அவர் மசியவில்லை.

இந் நிலையில் தஞ்சை கீழவாசலைச் சேர்ந்த பாலு (42) என்ற கூலித் தொழிலாளி மின்னல் வேகத்தில் டவரின்படிக்கட்டுகளில் ஏறினார். அவர் ஏறுவதைப் பார்த்த நரசிம்மன், மேலே வந்தால் நான் கீழே குதித்து விடுவேன் எனமிரட்டினார்.

ஆனால் அந்த மிரட்டலைக் கண்டு கொள்ளாமல் பாலு மேலே ஏறினார். நரசிம்மனை அவர் நெருங்கியபோது,எச்சரித்தபடியே கீழே குதித்துவிட்டார் நரசிம்மன். ஆனால் அவரது ஒரு கால் டவரின் இரும்பு கம்பியிலும்இன்னொரு கால் பாலுவின் கைகளிலும் சிக்கி கொண்டது.

தலைகீழாக தொங்கிய நிலையில் இருந்த அவரை பாலு கெட்டியாகப் பிடித்து கொண்டார். உடனே மேலும் சிலர்டவரில் நரசிம்மனை கயிற்றால் கட்டி, பத்திரமாக கீழே இறக்கி கொண்டு வந்தனர். போலீஸார் நரசிம்மனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் 4 மணி நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X