For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கைவிடப்பட்ட பீட்டர் அல்போன்ஸ் !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ் கட்சியின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராக விளங்கிய பீட்டர் அல்போன்ஸ் இன்றுஅனைவராலும் புறக்கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மூப்பனாரின் மிக நெருங்கிய சீடராக இருந்தவர் பீட்டர் அல்போன்ஸ். அந்தப் பக்கம் ப.சிதம்பரம் நின்றால் இந்தப்பக்கம் பீட்டர் நிற்பார். அந்தளவுக்கு மூப்பனாரின் மனம் கவர்ந்தவர்.

காங்கிரஸ் கட்சியிலேயே மிகவும் இளம் வயதில் மாவட்டச் செயலாளர் ஆனவர் பீட்டர் அல்போன்ஸ் மட்டும்தான்.அவரது செயல்பாடுகள், சுறுசுறுப்பு ஆகியவை கட்சியினர் மத்தியில் மிகவும் பிரபலம். குறிப்பாக அவரதுபேச்சாற்றல், காங்கிரஸ்காரர்களிடம் சாதாரணமாகக் காண முடியாதது.

சிறந்த பேச்சாற்றல் கொண்ட பீட்டர் அல்போன்ஸ், புத்திசாலித்தனமாகவும் பேசக் கூடியவர். புள்ளிவிவரங்களுடன்கூடிய தனது அறிவாற்றல் பேச்சால் சட்டசபையை பல முறை கலக்கியவர், ஆளுங்கட்சிகளுக்கு பயறுத்தலைக்கொடுக்கக் கூடிய வகையில் அவரது பேச்சு இருக்கும்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு அவரது முன்னேற்றம் இருந்தது.

இப்படிப்பட்ட பீட்டர் அல்போன்ஸ், மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு தனது நிலையிலிருந்து மாறினார்.ஜி.கே.வாசனுடன் சில காலம் இருந்து வந்த பீட்டர் திடீரென்று இளங்கோவன் அணிக்கு மாறினார். இது காங்கிரஸ்கட்சியில் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மூப்பனாரின் இடது கரம் போல இருந்து வந்த பீட்டர் அல்போன்ஸ் வாசனுக்கும் பேருதவியாக இருப்பார் என்றுகருதிய நிலையில், வாசனின் பரம விரோதியான இளங்கோவனிடம் பீட்டர் தஞ்சம் அடைந்தது, காங்கிரஸாருக்கேஆச்சரியமாக இருந்தது.

ஆனால் இளங்கோவனிடம் சென்றும் கூட அவருக்குப் பெரிதாக ஒன்றும் நடந்து விடவில்லை. இளங்கோவனின்பதவியே பறிபோனது. இதனால் பீட்டர் நிலைமை மோசமானது. இந்த நிலையில்தான் திருநெல்வேலி தொகுதியில்வேட்பாளர் பிரச்சினை பெரிதானது.

பீட்டரின் பெயரும் வேட்பாளர் தேர்வின்போது அடிபட்டது. ஆனால் அவருக்காக குரல் கொடுக்க பெரிதாகயாரும் இல்லாததால், சீட் தனுஷ்கோடி ஆதித்தனுக்குப் போய் விட்டது. வாசனுடன் பீட்டர் இருந்திருந்தால் நிச்சயம்அவருக்குத்தான் சீட் கிடைத்திருக்கும் என்கிறார்கள்.

பீட்டர் அல்போன்ஸும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்அல்ல. இதனாலும் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்று காரணம் கூறப்படுகிறது. ஆனால் நாடார் சமுதாயத்தைச்சேர்ந்த தனுஷ்கோடி ஆதித்தனை விட பீட்டர் அல்போன்ஸுக்கு திருநெல்வேலியில் நல்ல செல்வாக்கு உள்ளது.

அவர் நிறுத்தப்பட்டிருந்தால், கிறிஸ்தவர்களின் ஓட்டுக்கள் அப்படியே கிடைத்திருக்கும் என்று கூறுகிறார்கள். எதுஎப்படியோ, தனது தடுமாற்றமான அரசியல் முடிவுகளால் பீட்டர் அல்போன்ஸ் இப்போது தனி மரமாக நற்கிறார்.அவரது திறமையை காங்கிரஸ் தலைமை சரியாக பயன்படுத்திக் கொண்டால் கட்சிக்கும் நல்லது, அவரதுஎதிர்காலத்திற்கும் நல்லது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X