For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக பிரச்சாரத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள்: தேர்தல் ஆணையரிடம் எதிர்க் கட்சிகள் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதாகவும்,வாக்காளர்களுக்கு அதிமுக பணம் கொடுப்பதாகவும் தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் திமுக கூட்டணிக்கட்சியினர் புகார் தெரிவித்தனர். பதிலுக்கு அதிமுகவும் திமுக மீது புகார் தெரிவித்தது.

தமிழக தேர்தல் குறித்து ஆராய ஒருநாள் பயணமாக சென்னை வந்துள்ள தேர்தல் ஆணையர் கோபாலசாமி இன்றுகவர்னர் மாளிகையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

அதிமுக சார்பில் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன்,கல்யாணசுந்தரம், பாஜக சார்பில் குமாரவேலு, கண்ணன், காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகன், விநாயகமூர்த்தி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகேந்திரன், ராஜமோகன்,

பாமக சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி, வேல்முருகன் எம்.எல்.ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்ராமகிருஷ்ணன், நயினார், மதிமுக சார்பில் சபாபதி மோகன், நாச்சியப்பன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் செரீப்,முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திரன் தேர்தல் ஆணையரிடம் மகளிர் சுய உதவிக்குழுக்களை அதிமுக பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறது என்றும், வாக்காளர் பட்டியலில் ஏராளமான வாக்காளர்கள்விடுபட்டு உள்ளனர். அதிமுகவினர் போலியாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதை முறைபடுத்த வேண்டும் என்றும்வற்புறுத்தினோம்

தென்காசி தொகுதியில் ஆயக்குடி என்ற இடத்தில் அதிமுக வேட்பாளர் முருகேசன் மனைவி வசந்திவாக்காளர்களுக்கு பணம் மற்றும் சேலை கொடுப்பது குறித்தும் புகார் கூறினோம். இது குறித்து நடவடிக்கைஎடுப்பதாக தேர்தல் ஆணையர் கூறினார் என்றார் மகேந்திரன்.

குமாரவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பூத் சீலிப்பில் புளு மை பயன்படுத்துவது குறித்தும் தேர்தல் விதிமுறை மீறல் குறித்தும் பேசினோம். பாஜகவிதிமுறைகளை கட்டாயமாகக் கடை பிடிக்கும் என்று கூறினேன் என்றார்.

ராமகிருஷ்ணன் கூறியதாவது:

அடையாள அட்டை இல்லாதவர்கள் எந்த ஆதாரத்தை காட்டி வாக்களிக்கலாம் என்று கேட்டோம். அதற்கு இன்றுமாலை பத்திரிக்கையாளர்களிடம் 14 ஆவணங்கள் பற்றி சொல்வோம் என்று கூறியிருக்கிறார். ஒரே வீட்டில் 200,300 வாக்காளர்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டினோம்.

அமைச்சர் தளவாய் சுந்தரம் நாகர்கோவில் தொகுதியில் கம்யூனிஸ்டு வேட்பாளர் பெல்லார்மின் மீது தவறானபுகார்களை கூறி பிரசாரம் செய்வது பற்றி எடுத்துச் சொன்னோம் என்றார்.

சபாபதிமோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரத்துக்கு ஆயிரக்கணக்கான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் திமுகதலைவர் கருணாநிதி உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்புவழங்கப்படுவதில்லை என்று கூறினோம்.

முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தின்போது தனிநபர் விமர்சனம் செய்வது குறித்து புகார் தெரிவித்தோம். ஜெயாடி.வியில் தலைவர்கள் பற்றி தனிப்பட்ட முறையில் கீழ்த்தரமாக விமர்சித்து ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளின்வீடியோ கேசட் நகலை தேர்தல் ஆணையரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க சொன்னோம் என்றார்.

ஞானதேசிகன் கூறியதாவது:

பதட்டமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வாக்குப்பதிவின் போது தேர்தல்ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் போலீஸ் இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறோம்.

பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே மாவட்ட செயலாளர்கள் மூலம் 25 கோடி நிதியை திமுகதிரட்டியிருப்பதையும், வேட்பாளர்களிடம் தலா 50 லட்சம் முதல் 60 லட்சம் வரை டெபாசிட் தொகையாகவாங்கியதையும் புகார் தெரிவித்துள்ளோம் என்றார்.

இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாக்காளர் குளறுபடி குறித்தும், கருணாநிதிக்கு பாதுகாப்பு குறைவாக வழங்கப்பட்டிருப்பது குறித்தும் புகார்தெரிவித்துள்ளோம் என்றார்.

ஜி.கே.மணி கூறியதாவது:

கடந்த 10ம் தேதி கருணாநிதி தர்மபுரி வந்தபோது எங்கள் கூட்டணிக் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளைக்கிழித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 8 பேரைமட்டுமே கைது செய்தனர். மேலும் எங்கள் மீது பொய் வழக்கு போடுவது குறித்தும் புகார் செய்தோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X