For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செளந்தர்யாவின் மறைவு: தமிழ் திரையுலகினர் இரங்கல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகை செளந்தர்யாவின் மறைவுக்கு விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்தெரிவித்துள்ளனர்.

செளந்தர்யா தேர்தல் பிரசாரத்துக்கு போகும் போது, பயணம் செய்த குட்டி விமானம் விபத்துக்குள்ளானது. இதில் செளந்தர்யா,அவருடைய சகோதரர் உள்பட 4 பேர் உடல் கருகி இறந்தனர். செளந்தர்யாவின் மரணம் குறித்து திரையுலகின் பிரபல கலைஞர்கள்பலர் இரங்கல் தெரிவித்தனர்.

விஜயகாந்த்:

நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் கூறியதாவது:

Vijayakanthசெளந்தர்யா மரணச் செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந் தேன். என்னால் நம்ப முடிய வில்லை. அவர் நேரம்தவறாமல் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். அவரால் எந்த தொந்தரவும் இருக்காது. பிடிவாதம் இல்லாதவர்.மலிவான சேலையைக் கொடுத்தால் கூட கட்டிக் கொள்வார்.

டைரக்டு செய்ய வேண்டும் என்பது அவருடைய லட்சியமாகும். அது நிறைவேறாமலேயே மரணமடைந்து விட்டார்என்றார்.

சத்யராஜ்:

நடிகர் சத்யராஜ் கூறியதாவது:

Sathyarajசெளந்தர்யாவுக்கு அவருடைய அண்ணன் மீது பாசம் அதிகம். அதே போல் அவருடைய அண்ணனும்.கோபிச்செட்டிபாளையத்தில் சேனாதிபதி படப்பிடிப்பின் போது, செளந்தர்யா ஒரு பாறையில் வழுக்கி விழுந்துவிட்டார். அவருடைய அண்ணன் பதறிப் போனார். அப்படி பாசமான அண்ணன் தங்கையைப் பார்த்ததே இல்லை.அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

பார்த்திபன்:

நடிகர் பார்த்திபன் கூறியதாவது:

என் டைரக்ஷனில் இவன் படத்தில் செளந்தர்யா நடித்த போது, இதைவிட நல்ல கதாபாத்திரம் இனிமேல் எனக்குகிடைக்காது. அதனால் இனிமேல் தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார். அவர் சொன்னதன் அர்த்தம் இப்படிஅமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

Parthibanபோன ஏப்ரலில் அவருடைய திருமணத்துக்குப் போய் வந்தேன். இந்த ஏப்ரலில்... செளந்தர்யாவின் நினைவுகள்என்றென்றும் மனதுக்குள் பசுமையாக இருக்கும் என்று கூறினார்.

மீனா:

நடிகை மீனா கூறியதாவது:

செளந்தர்யாவுடன் இவன் உள்பட 4 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஒரு கன்னட படப்பிடிப்புக்காக நான்பெங்களூர் போய் இருந்ததேன். நான் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, செளந்தர்யா ஓட்டலுக்கு வந்து விட்டார்.என்னிடம் பிரியமாக பேசிக் கொண்டிருந்தார். இப்படி திடீர் என்று விபத்தில் இறந்து விடுவார் என்றுஎதிர்பார்க்கவில்லை. என்று கூறினார்.

Meenaகவுண்டமணி:

நடிகர் கவுண்டமணி கூறியதாவது:

பொன்னுமணி படத்தில் நடித்தபோது, செளந்தர்யா அறிமுகமானார். என்னை குடும்ப நண்பர் என்று செளந்தர்யாஅடிக்கடி சொல்வார். ரொம்பவும் பாசமான பொண்ணு என்றார்.

கே.எஸ்.ரவிகுமார்:

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் கூறியதாவது:

செளந்தர்யா என் டைரக்ஷனில் படையப்பா படத்தில் நடித்தார். அவருடைய சிரித்த முகம்தான் இப்போதுஞாபகத்துக்கு வருகிறது. அவருக்கு இதுமாதிரி அநியாய சாவு வந்திருக்க்கூடாது என்று கூறினார்.

விபத்தில் மரணமடைந்த செளந்தர்யா உள்பட 4 பேரின் உடல்களும் பெங்களூரில் உள்ள பெளரிங்மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.

செளந்தர்யாவை விமானத்தில் வழியனுப்ப வந்திருந்த அவருடைய அண்ணி நிர்மலா, மற்றும் உறவினர்கள்,விமானம் புறப்பட்ட வேகத்திலேயே தரையில் விழுந்து நொறுங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பிணங்களைப் பார்த்து கதறி அழுதனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்த மோகன் மூர்த்தி என்பவர் கூறும்போது, விமானம் தரையில் விழுந்ததைப் பார்த்து ஓடிச் சென்றுஉள்ளே சிக்கியிருந்தவர்களை வெளியே இழுக்க முயன்றேன். அப்போது விமானம் வெடித்து சிதறியதால் நான் தூக்கிவீசப்பட்டேன் என்றார்.

அதுபோல் இன்னொருவர் கூறும்போது, விமானத்தில் சிக்கியவர்களை வெளியே இழுக்க முயன்றேன். அப்போது பெட்ரோல்விமானப் பாகங்கள் வெடித்துச் சிதறியது என்றார்.

இவர்கள் இருவரும் தீக்காயங்களுடன் பெங்களூர் எலகங்கா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X