அமெரிக்காவில் மாணவியிடம் செக்ஸ் குறும்பு: இந்திய பேராசிரியருக்கு சிறை
வாஷிங்டன்:
அமெரிக்க பல்கலைக்கழக மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியப் பேராசிரியர் தெபசிஸ் செளத்ரிக்கு60 நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவரிடம் பயின்ற மாணவி ஒருவர் அக்டோபர் 9ம் தேதி கல்வி தொடர்பான சில சந்தேகங்களுக்காகபல்கலைக்கழகத்தில் உள்ள இவரது அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது அந்த மாணவியை செளத்ரி கற்பழிக்க முயன்றார். இவரிடம் இருந்து தப்பிய மாணவி போலீசில் புகார்தந்தார். இதையடுத்து இவரை போலீசார் கைது செய்து லான்செஸ்டர் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இவர் மீதான விசாரணை தொடங்க இருந்த நிலையில், குற்றத்தை செளத்ரி ஒப்புக் கொண்டார்.மாணவியின் விருப்பத்தை மீறி அவளிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.
இதையடுத்து இவருக்கு கடுமையான தண்டனை தருவதை தவிர்த்த நீதிபதி, 60 நாள் மட்டும் சிறையில் அடைக்கஉத்தரவிட்டார். ஏற்கனவே பல நாட்கள் இவர் காவலில் இருந்துவிட்டதால் 42 நாட்களில்விடுவிக்கப்பட்டுவிடுவார் என்று தெரிகிறது.
விசாரணையின்போது செளத்ரிக்காக ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பேசுகையில், மாணவி அணிந்திருந்தமிக மோசமான உடை தான், பேராசிரியரைத் தூண்டுவிட்டுவிட்டது, எனவே மாணவி மீது தான் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றார்.
குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு அதற்காக வருத்தமும் தெரிவித்த செளத்ரி தனது விசா வரும் மே 14ம்தேதியுடன் முடிவடைகிறது என்றும், அத்தோடு இந்தியாவுக்குத் திரும்பி தனது மனைவி, குழந்தையுடன்வாழ்க்கையைக் கழிக்க விரும்புவதாகவும் நீதிபதியிடம் கூறினார்.
குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என அரசு வழக்கறிஞரும்இறங்கி வந்தார். கற்பழிப்புக் குற்றத்துக்கு அமெரிக்காவில் 20 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications