For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் விறுவிறுப்பாய் நடந்து முடிந்த வாக்குப் பதிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

பல இடங்களில் காலை 6 மணி முதலே பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாக்குச் சாவடிகளில்வரிசையில் நின்று வாக்களித்தனர். கிராமப் பகுதிகளைவிட நகர்ப் புறங்களில் வாக்குப் பதிவுமும்முரமாக இருந்தது.

குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகர தொகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்குவாக்காளர்கள் கூட்டம் அலைமோதியது.

நேரம் செல்லச் செல்ல, தங்களது ஓட்டை வேறு யாராவது கள்ள ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தாலும்,ஆளுங்கட்சிக்கு எதிராக மிக பலமான அலை வீசுவதாலும் மக்கள் காலையிலேயே அதிக அளவில் வாக்குச்சாவடிகளில் திரண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி பெரும்பாலான வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல பகுதிகளில் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரியில் தேர்தல் பணிக்குச் சென்ற அதிகாரி மாரடைப்பால் காலமானர். மேட்டூர் மின் வாரிய ஊழியரானஅக்பர் பாட்ஷாவுக்கு அரூர் பகுதியில் தேர்தல் பணி தரப்பட்டிருந்தது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

வேலூர் ஆரிமுத்து மோட்டூர் என்ற இடத்தில் 19 அரவாணிகள் கூட்டமாக வந்து வாக்களித்தனர்.அரவாணிகளுக்கு தேர்தல் கமிஷன் வாக்குரிமை அளித்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

தமிழகத்தில் மொத்தம் 4.72 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். 39 தொகுதிகளிலும் 571வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மாநிலம் முழுவதும் 45,729 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 50,000 மின்னணுவாக்குப் பதிவு எந்திரங்களில் ஓட்டுப் பதிவு நடந்தது.

சென்னையின் மூன்று தொகுதிகள், கடலூர், கோவை, மதுரை, பெரியகுளம், திருநெல்வேலி,செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 13 தொகுதிகள் மிக அதிகமான பதற்றம் நிறைந்தவையாகஅடையாளம் காணப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சென்னையின் 3 தொகுதிகளிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இந்த மூன்றிலும் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக வட சென்னை தொகுதிக்குட்பட்ட 42 இடங்களில் மிகபலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பெசன்ட் நகர் வாக்குச் சாவடியில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கே.நடராஜ் வரிசையில் நின்றுவாக்களித்தார். பின்னர் நகரின் பல பகுதிகளிலும் வாக்குப் பதிவை நேரில் பார்வையிட்ட அவர்,செய்தியாளர்களிடம் பேசுகையில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளையும் சுற்றிப் பார்த்தேன். ஒரு இடத்தில் கூடஅசம்பாவித சம்பவம் ஏதும் நடக்கவில்லை. மிக மிக அமைதியாக வாக்குப் பதிவு நடந்து வருகிறது.

ஆலந்தூர், திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில்மட்டும் காலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்பிரச்சினை ஏற்பட்டது. இருப்பினும் உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது என்றார்.

பாண்டிச்சேரியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி வாக்குப் பதிவு நடந்தது.

ஆனால், பாமக வேட்பாளர் ராமதாஸ் தன்னை மிரட்டியதாக பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலம் புகார்கூறியுளளார். மேலும், பாஜக தொண்டர்களை பாமகவினர் மிரட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடக்கவுள்ளது.

சிவகாசியில் அமைச்சர் இன்பத்தமிழனால் ஏற்பட்ட கலாட்டா தவிர தமிழகத்தில் வாக்குப் பதிவுஅமைதியாகவே நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X