இந்திய- அமெரிக்க கூட்டணியில் புதிய சாட்டிலைட்பெங்களூர்:அமெரிக்காவின் போயிங் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆய்வுத் துறையும் இணைந்து தகவல் தொடர்பு செயற்கோள்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. அவற்றை பிற நாடுகளுக்கு விற்கவும் திட்டமிட்டுள்ளன.விமானக் கட்டுமானப் பணி தவிர விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது போயிங். இந்திய விண்வெளி ஆய்வுத் துறையான இஸ்ரோ, இன்சாட் ரக தகவல் தொடர்பு சாட்டிலைட்டுகள், ஐ.ஆர்.எஸ் ரக வானியல் ஆராய்ச்சி செயற்கைக் கோள்கள், ராக்கெட்டுகளைத் தயாரித்து வருகிறது.ஐ.ஆர்.எஸ். ரக செயற்கைக் கோள்களை இந்தியாவே தனது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் செலுத்தி வருகிறது. இன்சாட் ரக செயற்கைக் கோள்களை ஐரோப்பாவின் ஏரியன் ராக்கெட்டுகள் மூலம் ஏவி வருகிறது.இன்சாட் ரக செயற்கைக் கோள்களையும் தானே செலுத்தும் முயற்சியில் இருக்கும் இந்தியா, அதற்காக அதிக சக்தி வாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந் நிலையில் இந்தியாவோடு இணைந்து தகவல் தொடர்பு சாட்டிலைட்டுகளை உருவாக்கி, சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்ய போயிங் முடிவு செய்துள்ளது.இந்திய- அமெரிக்க விண்வெளி ஆய்வுக் குழுவின் கூட்டம் பெங்களூரில் நடந்து வருகிறது. இந் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அமெரிக்க வர்த்தகத்துறை துணை அமைச்சர் கென்னத் ஜஸ்டர் நிருபர்களிடம் பேசுகையில்,இஸ்ரோவுடன் இணைந்து செயற்கைக் கோள்களை உருவாக்க போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு சமீபத்தில் அனுமதி தந்துவிட்டது என்றார்.இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், போயிங்குடன் இணைந்து உருவாக்கப்படவுள்ள புதிய செயற்கைக் கோள்கள் இன்சாட்டின் தொழில்நுட்பத்தில் தான் உருவாக்கப்படவுள்ளன. அதில் போயிங் நிறுவன சாட்டிலைட்டுகளின் சில தொழில்நுட்பங்களும் சேர்க்கப்படும்.இரண்டு ஆண்டுகளில் இந்த சாட்டிலைட்டுகள் உருவாக்கப்பட்டு சர்வதேச சந்தையில் விற்கப்படும் என்றார்.இதற்கிடையே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவும், இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட விருப்பமாக உள்ளதாக அந்த அமைப்பின் துணை நிர்வாகி டாக்டர் பிரடெரிக் கிரிகெரி தெரிவித்துள்ளார்.இந்திய- அமெரிக்க விண்வெளி ஆய்வுக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க அவரும் பெங்களூர் வந்துள்ளார்.
பெங்களூர்:
அமெரிக்காவின் போயிங் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆய்வுத் துறையும் இணைந்து தகவல் தொடர்பு செயற்கோள்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. அவற்றை பிற நாடுகளுக்கு விற்கவும் திட்டமிட்டுள்ளன.
விமானக் கட்டுமானப் பணி தவிர விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது போயிங். இந்திய விண்வெளி ஆய்வுத் துறையான இஸ்ரோ, இன்சாட் ரக தகவல் தொடர்பு சாட்டிலைட்டுகள், ஐ.ஆர்.எஸ் ரக வானியல் ஆராய்ச்சி செயற்கைக் கோள்கள், ராக்கெட்டுகளைத் தயாரித்து வருகிறது.
ஐ.ஆர்.எஸ். ரக செயற்கைக் கோள்களை இந்தியாவே தனது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் செலுத்தி வருகிறது. இன்சாட் ரக செயற்கைக் கோள்களை ஐரோப்பாவின் ஏரியன் ராக்கெட்டுகள் மூலம் ஏவி வருகிறது.
இன்சாட் ரக செயற்கைக் கோள்களையும் தானே செலுத்தும் முயற்சியில் இருக்கும் இந்தியா, அதற்காக அதிக சக்தி வாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந் நிலையில் இந்தியாவோடு இணைந்து தகவல் தொடர்பு சாட்டிலைட்டுகளை உருவாக்கி, சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்ய போயிங் முடிவு செய்துள்ளது.
இந்திய- அமெரிக்க விண்வெளி ஆய்வுக் குழுவின் கூட்டம் பெங்களூரில் நடந்து வருகிறது. இந் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அமெரிக்க வர்த்தகத்துறை துணை அமைச்சர் கென்னத் ஜஸ்டர் நிருபர்களிடம் பேசுகையில்,
இஸ்ரோவுடன் இணைந்து செயற்கைக் கோள்களை உருவாக்க போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு சமீபத்தில் அனுமதி தந்துவிட்டது என்றார்.
இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், போயிங்குடன் இணைந்து உருவாக்கப்படவுள்ள புதிய செயற்கைக் கோள்கள் இன்சாட்டின் தொழில்நுட்பத்தில் தான் உருவாக்கப்படவுள்ளன. அதில் போயிங் நிறுவன சாட்டிலைட்டுகளின் சில தொழில்நுட்பங்களும் சேர்க்கப்படும்.
இரண்டு ஆண்டுகளில் இந்த சாட்டிலைட்டுகள் உருவாக்கப்பட்டு சர்வதேச சந்தையில் விற்கப்படும் என்றார்.
இதற்கிடையே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவும், இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட விருப்பமாக உள்ளதாக அந்த அமைப்பின் துணை நிர்வாகி டாக்டர் பிரடெரிக் கிரிகெரி தெரிவித்துள்ளார்.
இந்திய- அமெரிக்க விண்வெளி ஆய்வுக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க அவரும் பெங்களூர் வந்துள்ளார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications