தண்ணீர் இல்லை: தமிழகக்குக்கு கர்நாடகம் பதில்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் விட முடியாது என்று கர்நாடக முதல்வர் தரம்சிங் தமிழக அரசின்கடிதத்துக்குப் பதில் அளித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர்லட்சுமி பிராணேஷ் கடிதம் எழுதியிருக்கிறார்.
மேட்டூர் அணையில் இப்போது அதிக தண்ணீர் இருக்கிறது. தமிழக அரசு அந்த நீரை விவசாயத்துக்கு திறந்து விடவேண்டும். அதை விட்டு விட்டு கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்பது தவறு. ஏற்கனவே கர்நாடகம் தேவையானஅளவு தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட்டு இருக்கிறது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் எடுத்துக் கூறி இருக்கிறேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications