For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உமா பாரதி கைது: கர்நாடகம், மபியில் பந்த்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர் & போபால்:

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அவர் மீதான வழக்குகளை வாபஸ்பெறக் கோரியும் இன்று கர்நாடகத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் பாஜக சார்பில் முழு அடைப்பு நடத்தப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் அந்தக் கட்சியின் ஆட்சி நடப்பதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. அனைத்துக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இந்த பந்தை முறியடிக்க காங்கிரஸ் முதல்வர் தரம்சிங் தலைமையிலான அரசு அனைத்துமுயற்சிகளையும் எடுத்துள்ளது. பஸ்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. மேலும் அலுவலகங்களும் கல்விநிலையங்களும் வழக்கம்போல் இயங்குகின்றன.

பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற மாவட்டங்களில் பந்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அதே நேரத்தில்கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைத்த குல்பர்கா, பெல்காம், தாவனகெரே, ஷிமோ,பெல்லாரி, பீதர், பீஜப்பூர் மாவட்டங்களில் நகர்ப் பகுதிகளில் பந்துக்கு நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், கிராமப்பகுதிகளில் அவ்வளவாக ஆதரவில்லை.

மங்களூரில் சில இடங்களில் பாஜகவினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஒரு பஸ்சுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த நகரில்ஹோட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. உடுப்பிலும் பந்துக்கு ஆதரவு இருந்தது.

உமா பாரதி கைதாகக் காரணமாக இருந்த மதக் கலவரம் நடந்த ஹூப்ளி நகரில் பெரும்பாலான கடைகள்மூடப்பட்டுள்ளன. 5 பஸ்கள் மீது கல்வீச்சு நடந்ததையடுத்து, பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது.

பந்த்தையொட்டி கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஹூப்ளியில்ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் கமாண்டோபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெங்களூரில் சில பள்ளிகள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுவிட்டன. திறந்திருக்கும் பள்ளிகளுக்கும்குழந்தைகளை பெரும்பாலான பெற்றோர் அனுப்பவில்லை.

அதே நேரத்தில் அரசு, தனியார் அலுவலகங்கள் வழக்கம்போல இயக்குகின்றன. நாளை கர்நாடகத்தில் வரலட்சுமிபூஜை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இந்தப் பூஜையை ஒட்டி இரு நாட்கள் ஊழியர்களின் வருகைகுறைவாகவே இருக்கும்.

இப்போது பந்த்தும் சேர்ந்து கொண்டதால் பெரும்பாலான அரசு, தனியார் அலுவலகங்களில் ஊழியர்களின்வருமை பெருமளவில் குறைவாகவே உள்ளது.

நேற்று கைது செய்யப்பட்ட உமா பாரதி சிறிது நேரம் ஹூப்ளி துறைச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர்,தார்வாட் விவசாயப் பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மங்களூரில் சில இடங்களில் பாஜகவினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஒரு பஸ்சுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த நகரில்ஹோட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அனந்த்குமார் கைது செய்யப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X