For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதிக்கு கீதை: ராம.கோபாலனுக்கு தி.க. புக்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை & ஸ்ரீவில்லிபுத்தூர்:

Ramagopalan and Karunanidhiதிமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து, பகவத் கீதை புத்தகத்தைக் கொடுத்தார் இந்து முன்னணிஅமைப்பாளர் ராம. கோபாலன். பதிலுக்கு அவருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதியுள்ள கீதையின்மறுபக்கம் என்ற பெரியார் தத்துவ புத்தகத்தை பரிசாகத் தந்தார் கருணாநிதி.

முதல்வர் ஜெயலலிதா தனது கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், கீதை வழி நடப்போம் என்று கூறியிருந்தார்.இதற்கு கருணாநிதி கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். உலகப் பொதுமறையான திருக்குறள் குறித்து எப்போதும்வாயே திறக்காத ஜெயலலிதா, பகவத் கீதையை பொதுமறை என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறி அதற்கு கண்டனம்தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கீதைக்கு எதிராக கருணாநிதி பேசுவதாக பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கருணாநிதியின்கருத்துக்கு இந்து முன்னணியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன்கூறுகையில், தொடர்ந்து இந்துக்களையும், அவர்களது நம்பிக்கையையும் கருணாநிதி விமர்சித்து வருகிறார்.

கருணாநிதிக்கு பகவத் கீதையின் அருமையை உணர்த்தும் வகையில், அவரை நேரில் சந்தித்து பகவத் கீதைபுத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்வேன் என்று கூறியிருந்தார்.

அதன்படி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு ராம கோபாலன் வந்தார். அவரை கருணாநிதிவீட்டிற்குள் அனுமதிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், கருணாநிதி வீட்டினரால் சிரித்தபடியேவரவேற்கப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார் ராம. கோபாலன்.

பின்னர் கருணாநிதியை சந்தித்த ராம. கோபாலன் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, பின்னர் அவரிடம்பகவத் கீதையை வழங்கினார். அதை சிரித்தபடியே பெற்றுக் கொண்டார் கருணாநிதி.

பதிலுக்கு ராம கோபாலனுக்கு கீதையின் மறுபக்கம் என்ற தலைப்பில் திராவிடர் கழக பொதுச் செயலாளர்கி.வீரமணி எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கினார் கருணாநிதி. லேசாக அதிர்ச்சி காட்டிய ராம.கோபாலன்பின்னர், அந்தப் புத்தகத்தை மறுப்பேதுமின்றி வாங்கிக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு வணக்கம் தெரிவித்து அனுப்பி வைத்தார் கருணாநிதி.

இச் சந்திப்புக்குப் பின் வெளியே வந்த ராம.கோபாலன் நிருபர்களிடம் பேசுகையில்,

கருணாநிதி இன்னும் மாறவில்லை. தொடர்ந்து இந்து விரோத மனப்பான்மையையே கொண்டுள்ளார். பகவத்கீதையைக் கொடுத்த எனக்குப் பரிசாக கீதையை பழித்து எழுதப்பட்ட புத்தகத்தைக் கொடுத்துள்ளார்.

இப்போது அவருக்கு நிறைய நேரம் உள்ளதால் கீதையைப் படித்துப் பார்க்கட்டும் என்றார் ராம.கோபாலன். இந்தக்கருத்துக்களை கடிதமாகவும் கருணாநிதியிடம் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

ராம கோவாலன் தந்துள்ள அந்தக் கடிதத்தில், கேரள முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த மதானி, திருக்குறளையும்திருக்குர்ரானையும் ஒப்பிட்டு எழுதியுள்ள புத்தகத்தில் திருக்குறளை கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்குஇதுவரை நீங்கள் (கருணாநிதி) கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது இந்து முன்னணி.

ராம கோபாலன் சென்ற பின்னர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் சந்திப்பு குறித்துக்கேட்டபோது, பகவத் கீதையை நான் பழித்துப் பேசவில்லை. ஆனால் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் எனக்குஉடன்பாடில்லை. வர்ணாஸ்ரம தர்மம், ஜாதிப் பிரிவினையைத் தூக்கிப் பிடிக்கும் அதன் கருத்துக்கள் திராவிடக்கொள்கைகளுக்கு மாறானவை.

ஒரே குலத்தைச் சேர்ந்த தமிழ் மன்னர்களான நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளிக்கும் இடையே நடந்த போரைமுடிவுக்குக் கொண்டு வந்தார் தமிழ்ப் புலவர் கோவூர்க் கிழார். அதேசமயம், ஒரே குலத்தில் பிறந்தமன்னர்களுக்கிடையே போரைத் தூண்டியது கீதை.

பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற யுத்த தர்மத்திற்கு மாறாக அனைத்து சூழ்ச்சிகளையும் செய்தார்கிருஷ்ணர். அதையே பின்பற்ற வேண்டிய முறை என்று சொன்னால் அதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடியும்?

அதற்காக கீதையைக் கொளுத்துங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. நமக்கு ஏற்காததது என்று நாம் கருதிவிட்டஒன்றை முதல்வர் ஜெயலலிதா படியுங்கள் என்று சொல்வதைத்தான் நான் மறுக்கிறேன்.

தர்மம் என்பது இல்லறத்தில் இருந்து ஆதரிக்கிறது. அடுத்துதான் துறவற தர்மம் வரும். பாண்டவர்கள் பக்கம்இல்லற தர்மம் இருந்தது உண்டா? ஐவருக்கும் தேவி என்பதுதான் இல்லற தர்மமா? துரியோதனன் மனைவிபானுமதி ஒரே கணவனோடு குடும்பம் நடத்தினாள். அப்படியிருக்க தர்மம் யார் பக்கம்?

எனது கருத்துக்கள் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தாது. விநாயகர், ராமர் சிலைகளை பெரியார்உடைத்தார். ஆனால் அவரது சீடரான அண்ணாவோ, சிலைகளை உடைக்கவும் மாட்டேன், அதேசமயம் தேங்காய்உடைக்கவும் மாட்டேன் என்றார். அதுதான் அவரது சீடரான எனது கொள்கையும் என்றார் கருணாநிதி.

கருணாநிதி கொடும்பாவி எரிப்பு:

இந் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணி அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கருணாநிதியின்உருவபொம்மையை எரித்தனர். அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பாக இந்துமுன்னணி அமைப்பைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X