தலைமறைவான பயங்கர வெடிகுண்டுக் கும்பல்
சென்னை:
சென்னை அருகே முக்கிய பிரமுகர்களை தாக்க திட்டமிட்ட ஒரு வெடிகுண்டு கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னையை அடுத்த திருவேற்காடு சிவசங்கரன் நகரில் பாண்டியன் என்பவரது வீட்டில் கடந்த சில வாரங்களுக்குமுன் ஒரு பெண் உள்பட 5 நபர்கள் வாடகைக்கு குடியேறினர். இவர்கள் பகல் நேரங்களில் கதவை உள் தாழ்ப்பாள்போட்டபடியும், இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்றவற்றில் சென்று வருவதுமாகஇருந்துள்ளனர்.
இந் நிலையில் அந்த வீட்டில் 2 முறை பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து வீட்டின் உரிமையாளரானபாண்டியன் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது அவரைத் தள்ளிவிட்டுவிட்டு 2 பேர் மோட்டார்சைக்கிளில் ஒரு பெரிய சூட்கேசுடன் தப்பியோடியுள்ளனர்.
பாண்டியன் உள்ளே சென்று பார்த்தபோது வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்தது. அப்போது வீட்டுக்குள்இருந்த இன்னொரு நபர் வேகமாக தப்ப முயன்றார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சுற்றி வளைத்துப்பிடித்துவிட்டனர்.
மேலும் வீட்டுக்குள் வெடி விபத்தில் பலத்த காயம் அடைந்து 2 பேர் கிடந்தனர். அவரை அடையாளம் தெரியாதசிலர் ஓடி வந்து உதவி செய்வதாகக் கூறி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.
பிடிபட்ட வாலிபர் மட்டும் திருவேற்காடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீஸார் நடத்தியவிசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த செந்தில் (25), மோகன்பாபு (28), சம்பத்(27), பிரகாஷ் (23) உள்ளிட்டோர் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்தனர். இவர்களில் மோகன்பாபு, சம்பத்இருவரும் வெடிகுண்டு தயாரிக்கத் தெரிந்தவர்கள்.
3 சூட்கேஸ்களில் 50 கிலோவுக்கும் மேற்பட்ட வெடிப்பொருட்கள், 2 கைத்துப்பாக்கிகள், கத்தி, வீச்சரிவாள்போன்றவற்றை போலீஸார் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றினர். மேலும் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு ஒன்றும்செயலிழக்கப்பட்டது.
இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரிடம் 300 கையெறிக்குண்டு அடங்கிய சூட்கேஸ் இருப்பதாகக்கூறப்படுகிறது. மேலும் காயமடைந்து ஆட்டோவில் தப்பிச் சென்றவர்கள் எங்கு போனார்கள் என்றும்தெரியவில்லை.
சென்னையில் சில பிரமுகர்களை வெடிகுண்டு வீசி தாக்க இந்தக் கும்பல் தயாராகி வந்ததாக விசாரணையில்தெரியவந்துள்ளது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்











Click it and Unblock the Notifications