கல்விக்காக தனி செயற்கைக்கோள்: இந்தியா ஏவியது

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிஹோட்டா:

Gslvகல்வி ஒளிபரப்பிற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்துள்ள எஜூசேட் செயற்கைக்கோள் இன்று மாலை 4.01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிஹோட்டா சதீஷ் தாவன் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி.-எப்-01ராக்கெட் இந்த செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது.

ஏவப்பட்ட 7வது நிமிடத்தில் (4.18 மணி) இந்த செயற்கைக்கோள், ராக்கெட்டில் இருந்து பிரிந்து புவி வட்டப்பாதையில் (Geostationary Orbit) விடப்பட்டது.

செயற்கைக் கோள் வழியிலான ஆன்லைன் கல்வி ஒளிபரப்புக்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.இதன் எடை 1,950 கிலோ எடையைக் கொண்டது. தொலைதூரக் கல்வி, முறை சாராக் கல்வி உள்ளிட்ட கல்விக்குஎஜூசேட் மிகவும் உதவியாக இருக்கும்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாக சென்றடையும் விதத்தில் செயற்கைக் கோளில் மொத்தம் 5மண்டல பேண்ட்கள் உள்ளன. கே.யூ. பாண்ட் மூலம் ஒரு தேசிய ஒளிபரப்பும், 6 சி பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள்மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்கான ஒளிபரப்பும் இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.

இந்த செயற்கைக் கோள் விண்வெளியில் 36,000 கி.மீ. உயரத்தில் புவி வட்டப் பாதையில் ஏற்கனவே சுற்றி வரும்இன்சாட்-3சி, கல்பனா-1 ஆகிய செயற்கைக் கோள்களுக்கு அருகே நிலைநிறுத்தப்படவுள்ளது.

நேற்று பிற்பகல் 1 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிஹோட்டா விண்வெளி ஏவுதளத்தில் செயற்கைக் கோளைஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. இன்று மாலை திட்டமிட்டபடி 4.01 மணியளவில் செயற்கைக் கோள்ஏவப்பட்டது.

49 மீட்டர் உயரமும் 414 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் பாய்ந்தபோது விண்வெளித்தளத்தில் கூடியிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

புவி வட்டப் பாதையில் விடப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோளில் உள்ள என்ஜின்கள் (சிறிய ராக்கெட்டுகள்)மூலமாக புவிச் சுற்றுப் பாதைக்கு (Geo synchronous orbit) உயர்த்தப்படும்.

தமிழகத்தில் 25 கல்லூரிகளுக்கு பலன்:

எஜூசேட் செயற்கைக் கோள் மூலம் தமிழகத்தில் 25 கல்லூரிகளும் ஒன்றிணைக்கப்படவுள்ளன.

இந்தக் கல்லூரிகளில் செயற்கைக் கோள் மூலம் கல்வி ஒளிபரப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், 6 அரசுக் கல்லூரிகள், வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் 14 சுய நிதிபொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் எஜூசேட் மூலம் பலன் பெறவுள்ளன.

எஜூசேட் மூலம் பலனடையவுள்ள கல்லூரிகளில் ஒன்றான கன்னியாகும நூருஸ் இஸ்லாம் கல்லூரியின்அனைத்து வகுப்பறைகளிலும் ஏற்கனவே தொலைக்காட்சிப் பெட்டிகள் பொருத்தப்பட்டு விட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+