தமிழகத்தில் ரயில் மூலம் தண்ணீர் சப்ளை: லாலு
![]() |
ராஜபாளையம்:
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவும் பகுதிகளில் ரயில் மூலம் இலவசமாக தண்ணீர் சப்ளை செய்யத்திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு மனைவி, மகள்களுடன் வந்துள்ள லாலு பிரசாத் யாதவ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும்கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
நேற்று மதுரையில், புதிய டெல்லி-மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலைத் தொடங்கி வைத்த அவர் பின்னர் ராமேஸ்வரம்சென்று குடும்பத்துடன் சாமி கும்பிட்டார். பாம்பன் ரயில் பாலத்தையும் பார்வையிட்டார்.
அங்கு நிருபர்களிடம் பேசிய லாலு, காசி-ராமேஸ்வரம் இடையே ஒரு ரயிலை இயக்க உத்தரவிடப் போகிறேன்என்றார்.
இதையடுத்து இன்று ராஜபாளையம்,- தென்காசி இடையிலான புதிய அகல ரயில் பாதையைத் துவக்கி வைத்த லாலுபேசுகையில்,
ராஜபாளையத்தில் இருந்து தென்காசிக்கு இப்போது வாராந்திர ரயில் விடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் கலந்துபேசி விரைவில் இந்த ரயில் தினசரி இயக்க வைகை செய்வேன். தமிழ்நாட்டிற்குள் நான் சுற்றுப்பயணம்செய்யும்போது ஏராளமான மக்கள் வறட்சியின் பிடியில் சிக்கி குடிநீருக்காக அலைந்து கொண்டிருப்பதை நேரில்பார்த்தேன்.
எனவே கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவும் இடங்களுக்கு ரயில் மூலம் இலவசமாக குடிநீர் கொண்டு செல்லத்திட்டமிட்டுள்ளேன். இது குறித்து பிரதமருடனும், ரயில்வே உயர் அதிகாரிகளுடனும் ஆலோசித்துவிட்டுஅறிவிப்பு வெளியிடுவேன்.
பிற மாநிலங்களுக்கு நேர்முகத் தேர்வு எழுதச் செல்லும் ஏழை மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும்.
ரயில்களில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவற்றை உயர்த்த மாட்டோம். கட்டணத்தைஉயர்த்தாமலேயே கடந்த 4 மாதத்தில் ரயில்வே துறை சிறப்பான சேவையும், கூடுதல் வருவாயும் ஈட்டியுள்ளதுஎன்று அவர் கூறினார்.
இந்த விழாவை முடித்து விட்டு லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்தாருடன் தனி ரயிலில் கன்னியாகுமரிபுறப்பட்டார். அங்கு ரூ.3 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தைப் பார்வையிடுகிறார். பின்பு கேரளஅரசு விருந்தினர் மாளிகையில் இன்றிரவு தங்குகிறார்.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்













Click it and Unblock the Notifications