ஆயுத தயாரிப்பு: இந்தியா- இங்கிலாந்து ஒப்பந்தம்
லண்டன்:
பாதுகாப்பு, அணு ஆராய்ச்சி, உயர் தொழில்நுட்ப வர்த்தகம் ஆகிய துறைகளில் கூட்டாக இணைந்து பணியாற்ற இந்தியாவும்இங்கிலாந்தும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. மேலும் தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளில் இரு நாடுகளும்ஒருவருக்கொருவர் முழு ஒத்துழைப்பு வழங்கவும் முடிவு செய்துள்ளன.
அமெரிக்கா செல்லும் வழியில் லண்டன் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கும் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரும் இந்த ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் இணைந்து ஆயுதங்கள் தயாரிப்பில் இறங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள்கடத்தல் தடுப்பு, சட்ட விரோத குடியேற்றத் தடுப்பு, விண்வெளி ஆராய்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், கல்வி ஆகியவற்றில் இணைந்துசெயலாற்றவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
டோனி பிளேருடன் சர்வேதச விவகாரங்கள் குறித்து விவாதிக்கவுள்ள சிங் பின்னர் அமெரிக்கா கிளம்புகிறார்.
ரஷ்யா, சீனா, ஜப்பான் தவிர இந்தியாவுடனும் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த இங்கிலாந்து தீவிரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அதிபர் புஷ்ஷை சந்திக்கும் மன்மோகன் சிங் பின்னர் ஐநா சபையில் உரையாற்றுகிறார். அக் கூட்டம் முடிந்த பின்பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபையும் சந்திக்கிறார்.
-
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications