பார்கள் மீது நடவடிக்கை கோரும் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடிய விடிய பார் நடத்தும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

தஞ்சாவூர் அருகே திருவிடைமருதூரில் உள்ள நாதஸ்வர வித்வான் வாழ்ந்த வீடு இன்று அரசாங்க சாராயக்கடையாக மாறியிருக்கிறது.

சென்னையில் நள்ளிரவில் குடிவெறியில் 4 இளைஞர்கள் காரில் விரட்டிச் சென்று மோதி ஒரு பெண்பலியாகியிருக்கிறார்.

இந்த இரு செய்திகளும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. எந்த இடத்தில் சாராயக் கடை திறப்புது என்ற விவஸ்தைஇல்லாமல் புற்றீசல் மாதிரி கடையைத் திறக்கவும், கட்டுபாடு இல்லாமல் பார் நடத்தவும் அனுமதிப்பதன்விளைவுகள் தான் இவை.

சென்னையில் காரில் விரட்டிச் சென்று ஸ்கூட்டரில் மோதில் பெண்ணைக் கொன்ற நான்கு குடி வெறியர்களையும்படம் எடுக்க போலீஸ் அனுமதிக்கவில்லை என்று நிருபர்கள் கூறுகின்றனர். சாதாரண குற்றவாளிகளை, கையில்ஸ்லேட் கொடுத்து பேர், நம்பர் போட்டு படம் எடுக்க அனுமதிக்கும் போலீசார் இந்த நால்வரையும் படமெடுக்கவிடாமல் தடுத்தது ஏன்? இவர்கள் வசதியான வீட்டுப் பிள்ளைகள் என்பதாலா?

கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவன் 16 வயதுக்கு உட்பட்டவன், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு பீடி,சிகரெட் விற்பதே பெருங் குற்றம். இந் நிலையில் 16 வயது சிறுவனுக்கு மது விற்க ஹோட்டல் மீது என்னநடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

நட்சத்திர ஹோட்டல்களில் இரவு முழுக்க பார்களைத் திறந்து வைப்பதும், ஆபாச கேளிக்கை டான்ஸ் ஆடுவதும்வாடிக்கையாக உள்ளது. இதனால் கைகலப்புகள், குடிவெறி விபத்துக்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

10 மணிக்கு மேல் சாயா கடையைத் திறந்து வைத்தாலே, லத்தியால் தட்டி கடையை மூடச் சொல்லும் போலீசார்,நள்ளிரவுக்கு மேல் பார் திறக்க அனுமதித்தது ஏன்?

பார்களை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும், ஆபாச டான்ஸ் உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்களில்நடக்கும் கலாச்சார சீர்கேட்டைத் தடுக்க போலீஸ் முன் வர வேண்டும்.

இந்த ஹோட்டல்களில் தவறு செய்வோரைப் பிடித்து அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் படம்பிடித்து பத்திரிக்கைகளில் வெளியிட போலீசாரே முன் வர வேண்டும். அப்படிச் செய்தால் தான் இது போன்றமேல்மட்ட சமூகத்தினர் செய்யும் குற்றங்கள் குறையும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+