இராக்: மேலும் ஒரு அமெரிக்கர் தலை துண்டிப்பு
பாக்தாத்:
இராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பிணைக் கைதிகளில் மேலும் ஒரு அமெரிக்கர் தலை துண்டித்து கொலைசெய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாக்தாத்தில் இருந்து 2 அமெரிக்க என்ஜினீயர்கள் மற்றும் ஒரு இங்கிலாந்துநாட்டவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அபு மு சாப் அல் ஜர்காவி தலைமையில் ஆன இந்த தீவிரவாதிகள்அமெரிக்கர்களால் சிறை பிடிக்கப்பட்ட இராக் பெண் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் இதைஏற்காவிட்டால் பிணைக் கைதிகளை கொலை செய்வோம் என்றும் மிரட்டி இருந்தனர்.
இந்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்காததால், கடத்தப்பட்ட 2 அமெரிக்கர்களில் ஆம்ஸ்ட்ராங் என்பவரை தலைதுண்டித்துக் கொலை செய்தனர். இதை படமெடுத்து அரேபிய தொலைகாட்சிக்கு தீவிரவாதிகள்அனுப்பியிருந்தார்கள்.
எஞ்சியுள்ள 2 பேரையும் விடுவிக்க வேண்டுமானால் 24 மணி நேரத்துக்குள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று கெடு விதித்து இருந்தனர். இந்தக் கெடு முடிவடைந்த பின்பும் தங்களது கோரிக்கைநிறைவேற்றப்படாததால், ஜாக் ஹென்ஸ்லே என்ற மேலும் ஒரு அமெரிக்கரின் தலையை தீவிரவாதிகள்துண்டித்தனர்.
இதை படமெடுத்து ஒரு அரேபிய இணையதளத்தில் ஒளிபரப்பினார்கள். தற்போது இங்கிலாந்து நாட்டவரானகென்னத் பிங்க்லே என்பவர் மட்டும் தீவிரவாதிகளின் வசம் இருக்கிறார்.
இந் நிலையில் அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பெண்விஞ்ஞானிகளில் சூரிகாப் தாகா என்ற பெண் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் ஒருவரை விடுதலைசெய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. நுண்ணுயிர் ஆயுதங்களை இவர் தயாரித்தாக அமெரிக்கப்படையினரால் கைது செய்யப்பட்ட இவர், இன்று விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications