உறுப்பினர் சேர்க்கையில் மதிமுக, காங். தீவிரம்
சென்னை:
மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தனித்தனியாக நடந்தது. இருகூட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை முடுக்கி விட முடிவு செய்யப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் சென்னையில் இன்றுநடந்தது. கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர்வைகோ, பொருளாளர் கண்ணப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 9 மற்றும் 10 ஆகியதேதிகளில் கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ள கட்சியின் விவசாயிகள் மாநாட்டை சிறப்பாகநடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முக்கிய முடிவாக, கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இதேபோல, தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.இக்கூட்டத்திற்கு மேலிடப் பிரதிநிதியான கே.பி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர்இதில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள், உறுப்பினர் சேர்க்கையை முடுக்கிவிடுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் வாசன், இளங்கோவன் கோஷ்டி மோதல் தொடர்பாகவும் மேலிடப் பிரதிநிதிகிருஷ்ணமூர்த்தி கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்தார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications