ஜெயலலிதாவுடன் விஜயக்குமார் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil
Vijayakumar and Jayalalitha
சென்னை:

வீரப்பன் சகாப்தத்தை வெற்றிகரமாக முடித்த தமிழக சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் இன்றுமுதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அவருக்கு முதல்வர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.

தமிழக சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் இன்று காலை சென்னை வந்தார். காவல்துறை சீருடையில்வந்த அவர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்திற்கு சென்றார்.

அவரை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்ற ஜெயலலிதா நெடு நேரம் வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர்வீரப்பனையும், அவனது கும்பலையும் பிடித்தது எப்படி என்பது குறித்து விஜயக்குமார் ஜெயலலிதாவின்விளக்கினார்.

அப்போது, இந்த வேட்டைக்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், ஜெயலலிதாவுக்கும்அதிரடிப்படையினர் சார்பில் நன்றி தெரிவித்தார் விஜயக்குமார்.

வீரப்பனையும், அவனது கூட்டத்தையும் ஒழித்துக் கட்டியதன் மூலம் தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் மிகப்பெரிய உதவியை அதிரடிப்படை செய்துள்ளதாக கூறிய ஜெயலலிதா, விஜயக்குமாருக்கும்,அதிரடிப்படையினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறி பாராட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+