நிலைமாறும் ஜெ, பாஜக: கருணாநிதி தாக்குதல்
சென்னை:
தேர்தல் முடிவுக்கு ஏற்ப முதல்வர் ஜெயலலிதாவும், பாஜகவினரும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக முரசொலியில் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதியை பாஜகவினரும், அவரது பக்கத் துணைப்பட்டாளங்களும்இடித்து மகிழ்ந்தனர். அப்போது டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டு, அயோத்தியில் ராமர்கோயிலை கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் பாஜகவினரும் ஜெயலலிதாவும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்று உணர்ந்து இந்துத்துவாகோஷத்தை கைவிட்டது போல நடிப்பு காட்டினார்கள். அதை நம்மால் பின்னால்தான் புரிந்து கொள்ள முடிந்தது.
அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் அத்வானி பேசியபோது, இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையுடன் வாழ பாஜகபாடுபடும் என்று பேசினார். தேர்தல் தோல்விக்குப் பின், ராமர் கோவில் கட்டுவதில் காட்டிய மெத்தனம்தான் தோல்விக்கு முக்கியகாரணம். இனி இந்துத்துவா விஷயத்தில் பாஜக ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என்று கூறுகிறார்.
தேர்தல் வெற்றி தோல்விகளைப் பொறுத்து இவர்கள் தங்களது லட்சியங்களை உருமாற்றிக் கொள்கின்றனர். ஆகஸ்ட் மாதம்கோவாவில் நடந்த மாநாட்டில் இந்துத்துவாவை பாஜக கைகழுவுகிறது என்றார்கள்.
இப்போது இந்துத்துவாவை மீண்டும் கையில் எடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். எனவே மாதம் ஒரு முறை தங்கள் நிலையைமாற்றிக் கொள்கிறார்கள். நாட்டு ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கதிற்கும் மட்டும் வேட்டு வைப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இந் நிலையில் சிறுபான்மை சமூகங்களில் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களைமுன்னேற்ற என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை ஆராய ஒரு கமிஷனை மன்மோகன் தலைமையிலான அரசுநியமித்துள்ளதைக் குறிப்பிட விரும்புகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications