தற்காலிக தலைமை நீதிபதி தினகர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக தினகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதி-ப-தி-யாக பணியாற்றிய சுபாஷன் ரெட்டி கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமைநீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
நாளை மறுநாள் அவர் அந்தப் பொறுப்பை ஏற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்தது.
இந் நிலையில் உயர் நீதிமன்றத்தின் தற்கா-லிக தலைமை நீதிபதியாக தினகர் நிய-மிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறப்பித்துள்ளார்.
புதிய தலைமை நீதிபதியாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கட்ஜு பதவியேற்கும்வரை இவர் தற்காலிக தலைமைநீதிபதியாக செயல்படுவார்.












Click it and Unblock the Notifications