எங்கள் சரித்திர சாதனை: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பனை சுட்டுக் கொன்றது எனது அரசின் மிகப் பெரிய சாதனையாகும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று தானாகவே 110வது விதியின் கீழ் ஒரு அறிக்கை தாக்கல்செய்தார். அதில் ஜெயலலிதா கூறியதாவது:

வீரப்பன் 124 பேரைக் கொலை செய்துள்ளான். 1,000 யானைகளைக் கொன்றுள்ளான். அவன் மீது 172 வழக்குகள் நிலுவையில்இருந்தன. இதனால் தான் அவனது செயல்பாடுகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க 1993ம் ஆண்டில் அதிரப்படையைஉருவாக்கினேன்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அந்தப் படையை முடக்கியது. நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதிரடிப்படைக்குமீண்டும் உயிர் கொடுத்தேன். எனக்கு அந்தப் படையினர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. பலவிதமானஅவமானங்களுக்குப் பின்னரும் அவர்களால் வீரப்பனை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

வீரப்பனை ஒழித்தது எனது அரசின் மாபெரும் வெற்றி என்றார் ஜெயலலிதா.

அவர் பேசிக் கொண்டிருந்தபோதே எழுந்த திமுகவினர், தேவையில்லாமல் திமுக ஆட்சியை முதல்வர் குற்றம் சாட்டுவதாகக் கூறிஎதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒரு முதல்வர் தானாகவே ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது அதில் யாரையும் குற்றம் சாட்டக் கூடாது என்பது மரபு.அதைக்காற்றில் பறக்க விட்டுவிட்டார் ஜெயலலிதா என்றார் திமுக சட்டமன்றக் கட்சித் தலைவரான துரைமுருகன்.

அப்போது சபாநாயகர் காளிமுத்து குறுக்கிட்டு, வீரப்பனை சுட்டுக் கொன்றது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம். அதைபாராட்ட வேண்டும். இதற்காக வீராங்கனை தமிழக முதல்வர் புரட்சித் தலைவியை சபையில் தலைவரான நான் பாராட்டுகிறேன்என்றார்.

அப்போது எழுந்த துரைமுருகன், தேவையில்லாமல் திமுகவை குற்றம் சாட்டிய முதல்வரைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்என்று கூறி திமுகவினரும் வெளியேறினார்.

வெளியில் வந்த துரைமுருகன் நிருபர்களிடம் பேசுகையில், வீரப்பன் விஷயத்தில் இந்த அரசை அவர்களே புகழ்ந்துகொள்ளட்டும். அதற்கு ஏன் திமுகவை குறை சொல்ல வேண்டும்? என்றார்.

கூட்டத் தொடர் முடிந்தது:

இந் நிலையில் தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்தது.

இந்தக் கூட்டத் தொடர் கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடந்த 5 நாட்களாக நடந்து வந்த கூட்டத் தொடர் இன்றுடன்முடிவடைந்தது. சபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் காளிமுத்து ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+