• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

65 கிலோ தங்கம் எங்கே?: உஷாவிடம் தீவிர விசாரணை!

By Staff
|

காஞ்சிபுரம்:

Ushaகாஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 65 கிலோ தங்கம் காணாமல் போனது, மற்றும் ஜெயேந்திரருடனானதொடர்புகள் ஆகியவை குறித்து உஷாவிடம் காஞ்சிபுரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார் இன்று முழுவதும்தீவிரமான விசாரணை நடத்தினார்.

ஜெயேந்திரருடன் தொடர்பு வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படும் ஸ்ரீரங்கம் உஷா இன்று காலை காஞ்சிபுரம் எஸ்.பி.பிரேம்குமார் முன்பு தனது வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்துடன் ஆஜரானார்.

அவரிடம் எஸ்.பி. பிரேம்குமார் மற்றும் பிற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காமாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 65கிலோ தங்கம் குறித்து உஷாவிடம் முக்கியமாக விசாரிக்கப்பட்டது.

காமாட்சியம்மன் கோவிலில் தங்கத் தேர் செய்வதற்காக 100 கிலோ தங்கம் சங்கர மடத்திற்கு வந்தது. பக்தர்களால் வழங்கப்பட்டஇந்த தங்கத்தில் 35 கிலோ தங்கத்தை மட்டுமே பயன்படுத்தி தங்கத் தேர் செய்யப்பட்டது. மீதமுள்ள தங்கம் எங்கே என்று கேட்டுஜெயேந்திரருக்கு பல கடிதங்கள் அனுப்பினார் சங்கரராமன்.

இந்து அறநிலையத்துறை மற்றும் சில பத்திரிக்கைகளுக்கும் இந்தக் கடித நகல்களை அனுப்பி வைத்தார் சங்கரராமன்.

இந்தத் தங்கத்தில் ஒரு பகுதி உஷாவிடம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த சந்தேகத்தின்அடிப்படையில் தங்கம் குறித்து உஷாவிடம் இன்று முழுவதும் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

மேலும் சங்கர மடம் சார்பில் உஷாவுக்கு தரப்பட்ட பணம் எவ்வளவு, என்னென்ன உதவிகளை அவர் மடத்திலிருந்தும்,ஜெயேந்திரடமிருந்தும் பெற்றுள்ளார். ஜெயேந்திரர் எப்போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொள்வார், என்ன பேசுவார்என்பது உள்பட பல கேள்விகள் உஷாவிடம் கேட்கப்பட்டன.

உஷாவிடம் நடத்தப்பட்ட இந்த விசாரணை வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேவைப்பட்டால் உஷா கைது செய்யப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

நேற்றும் உஷாவிடம் 6 மணி நேரம் மாரதான் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குரு-சிஷ்யை உறவு:

Jayendrar and Usha

திருச்சியில் மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு ஆதரவாக சங்கராச்சாரியார் பேசிய கூட்டத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த உஷா(வட்டமிடப்பட்டவர்)

நேற்றிரவு நிருபர்களிடம் பேசிய உஷா, எனக்கும் சங்கராச்சாரியாருக்கும் இடையிலான உறவு ஒரு குருவுக்கும் சிஷ்யைக்கும்இடையிலான உறவு தான். அதை மீறி இதில் எதுவும் இல்லை.

எனக்கு கோடிக்கணக்கில் அவர் பணம் கொடுத்தார் என்பதெல்லாம் பச்சைப் பொய். எனது மருத்துவ சிகிச்சைக்காக மாதம் ரூ.5,000 முதல் ரூ. 7,000 வரை கொடுத்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய்க்கு கீமோதெராபி சிகிச்சை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டபோதெல்லாம் அதிகபட்டமாக ரூ. 10,000 தந்துள்ளார்.

மடத்தில் இப்படி பல பேர் மருத்துவ உதவி பெறுகிறார்கள். அப்படித்தான் எனக்கும் நிதியுதவி செய்தது மடம்.

மற்றபடி எனது வங்கிக் கணக்குக்கு கோடிக்கணக்கில் ஜெயேந்திரர் பணத்தை மாற்றியதாக போலீசார் கூறுவது பொய். வங்கியில்போய் சோதித்துக் கொள்ளட்டுமே...

நான் ஜெயேந்திரரின் தீவிர பக்தை. போனில் நாங்கள் பேசுவது கூட புற்று நோயாளியான எனக்கு ஆறுதல் சொல்லத்தான். எனதுகாலையை ஆசிர்வாதத்துடன் தொடங்குவதற்காக அவர் போன் செய்வார்.

என் புற்றுநோய் காரணமாக என் கணவரே என்னைவிட்டுப் போய்விட்டார். கட்டிய கணவனுடனே சாதாரண வாழ்க்கை வாழமுடியாத நான் எப்படி கீழ்த்தரமான வாழ்க்கை வாழ முடியும்? தவறே இல்லாத ஒரு குரு-சிஷ்யை உறவைஅசிங்கப்படுத்திவிட்டது போலீஸ்.

எனக்கு வீடுகள் வாங்கித் தந்தார், பணத்தை அள்ளித் தந்தார் என்று ஜெயேந்திரர் மீது அபாண்டமான பழி போடுகின்றனர்.அப்படி எந்த வசதியும் அவர் எனக்குச் செய்து தந்திடவில்லை. என் அன்றாட மருத்துவ செலவுக்கே உதவினார் என்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X