For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எஸ்.பி. பிரேம்குமாரின் பிளாஷ்பேக்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

SP Prem Kumarபரபரப்பான சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் பிரேம்குமாரின் கடந்த காலம் குறித்து வரும் தகவல்கள் திடுக்கிடும் வகையில் உள்ளன.

சங்கர மடத்து ஆதரவாளர்களால் தோண்டப்பட்டு பத்திரிக்கைகளில் வெளியாக ஆரம்பித்துள்ளது பிரேம்குமாரின்இந்த பிளாஷ்பேக்.. அதன் விவரம்:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் பிரேம்குமார். அந்தசமயத்தில் வாடிப்பட்டியைச் சேர்ந்த நல்லகாமன் என்பவர் பிரேம்குமாரிடம் சிக்கி சின்னாபின்னமானார்.

வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த ஒரு காவலரின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார்நல்லகாமன். இவர் வீட்டைக் காலி செய்ய முடிவு செய்து தான் கொடுத்திருந்த ரூ. 5,000 முன் பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார்.

பணத்தை தர மறுத்தார் அந்தக் காவலர். பணத்தைக் கொடுக்காமல் வீட்டைக் காலி செய்ய மாட்டேன் என்றுநல்லகாமன் கூறியுள்ளார். இதுகுறித்து பிரேம்குமாரிடம் புகார் கூறியுள்ளார் காவலர்.

இதையடுத்து 1982ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி நல்லகாமனும், அவரது மனைவியும் வாடிப்பட்டி காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பிரேம்குமார் மற்றும் காவலர்களால் அடித்து நொறுக்கப்பட்டனர்.

அதன் பின்னர் நல்லகாமனின் கையில் விலங்கு மாட்டப்பட்டு அவர் வாடிப்பட்டி தெருக்கள் வழியாகநடத்தப்பட்டு, பஸ் நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் நல்லகாமன் மீது கொலைமுயற்சிவழக்கை பதிவு செய்தார் பிரேம்குமார்.

பிரேம்குமாரின் இந்த அத்துமீறல்கள் குறித்து பெரும் சர்ச்சை எழவே ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.ஆர்.டி.ஓ. விசாரணையில் பிரேம்குமார் மீது தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரேம்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் பதவியிலிருந்து தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டார். நல்லகாமன் மீது பிரேம்குமார் பதிவு செய்த வழக்கும், பிரேம்குமார் மீது ஆர்.டி.ஓ பதிவு செய்தவழக்கும் மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

அந்த சமயத்தில், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு எழுதி அதில் தேறியிருந்தார்பிரேம்குமார். இதையடுத்து அவருக்கு டி.எஸ்.பியாக பதவி உயர்வு கிடைத்தது.

ஆனால் டி.எஸ்.பி. பதவி உயர்வு கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டது, தற்காலிகமானது என்று மதுரை செஷன்ஸ்நீதிமன்றம் முட்டுக் கட்டையுடன் பிரேம்குமாரின் பதவி உயர்வுக்கு வழி விட்டது.

அதன் பின்னர் மதுரை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி கோரி உயர் நீதிமன்றம்சென்றார் பிரேம்குமார். அதில் அவருக்கு சாதகமான உத்தரவு கிடைத்தது.

ஆனால் உச்ச நீதிமன்றம் அதைத் தடை செய்தது. மேலும் வழக்கை தொடர்ந்து நடத்தி 1995ம் ஆண்டு மார்ச் 31ம்தேதிக்குள் முடிக்குமாறு உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இது பிரேம்குமார தளரச் செய்யவில்லை. இந் நிலையில் அவர் எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்துசென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய அவர் தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறும், இந்த வழக்குவிசாரணைக்கு நல்லகாமன் தடையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணைக்கு தடையாக இருப்பதுநல்லகாமன் அல்ல, பிரேம்குமாரும், சக போலீஸாரும்தான் என்று நீதிபதி கற்பகவிநாயகம் கடுமையாகக் கூறினார்.

வழக்கு தொடர்பாக மதுரை நீதிமன்றம் 1995, செப்டம்பர் முதல் 2000மாவது ஆண்டு மார்ச் மாதம் வரை 13 முறைஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்டுகளை பிரேம்குமாருக்கு எதிராகப் பிறப்பித்தது.

ஆனால் ஒரு முறை கூட பிரேம்குமார் கைது செய்யப்படவில்லை. மேலும், வாடிப்பட்டி காவல் நிலையத்தில்,நல்லகாமனின் மனைவியின் சேலையைப் பிடித்து இழுத்த செயலுக்காகவும், அவரது தாலியை பறிக்கமுயன்றதற்காகவும் பிரேம்குமாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார் நீதிபதி கற்பகவிநாயகம்.

இப்படிப்பட்ட பிரேம்குமார் எப்படி இவ்வளவு வேகமாக பதவி உயர்வுகள் பெற்று எஸ்.பி. ஆனார் என்றும்நீதிபதியே ஆச்சரியப்பட்டார். நல்லகாமன் சம்பவம் நடந்த நிான்கு மாதங்களில் பிரேம்குமார் கன்னியாகுமரிக்குமாற்றப்பட்டார்.

ஆனால், அங்கு நடந்த இன்னொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியார் ஜான் ஜோசப். இவர் கில்பர்ட்ராஜ் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், நானும், என்னுடன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்தவ சகோதரிகள் விஸ்லின்பெமினா ரோஸ், சஹாயராணி ஜெயமேரி ஆகியோரும் போலீஸ் காவலில் மிகக் கொடுமையாகவும்,அநாகரீகமாகவும் நடத்தப்பட்டோம்.

டி.எஸ்.பி. பிரேம்குமாரும், இன்னொரு டிஎஸ்பி பன்னீர் செல்வம் என்பவரும் எங்களை மிகவும் கேவலமாகவும்,கொடூரமாகவும் நடத்தினர் என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கையும் நீதிபதி கற்பகவிநாயகம்தான்விசாரித்தார்.

மனுதாரர்களின் புகார்களை அறிந்த அவர் மிகவும் அதிர்ச்சியுற்று சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மனுதாரர்களான ஜான் ஜோசப், பெமினா ரோஸ், சஹாயராணி ஜெயமேரி ஆகியோர் நீதிமன்றத்தில் கொடுத்தவாக்குமூலங்களில் கூறியுள்ளதாக நீதிபதி கற்பகவிநாயகம் எழுதியுள்ள குறிப்புகளிலிருந்து சில:

... சஹாயராணியின் அருகே வந்த டிஎஸ்பி பிரேம்குமார், அவரது சேலையை உருவினார். பின்னர்உள்ளாடையையும் அவர் கிழித்தெறிந்தார். பிறகு அவரது மார்பகத்தைப் பிடித்து இழுத்தார்.

அதன் பின்னர் லத்தியை எடுத்து சஹாயராணியின் வயிற்றில் வைத்து அடித்தார். பிறகு அவரது அந்தரப்பகுதிகளில் லத்தியை வைத்து அடித்தார். மறுபக்கம் டிஎஸ்பி பன்னீர் செல்வம், பெமினா ரோஸின் சேலையைஅவிழ்த்தார். பிறகு ஜாக்கெட்டைக் கிழித்து அவரது மார்பகத்தை கையை வைத்து இழுத்தார்.

பிறகு லத்தியால் அவரது மார்பகம், வயிறு ஆகிய இடங்களில் அடித்தார். இவற்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்தஜான் ஜோசப், பெமினா ரோஸின் தந்தை ஞானகன் ஆகியோர் பிரேம்குமார், பன்னீர் செல்வத்தின் கால்களில்விழுந்து கதறினர்.

நீங்கள் என்ன சொன்னாலும் அதை எழுதி கையெழுத்துப் போட்டுத் தருகிறோம் என்று கதறினர் என்று நீதிபதிகற்பகவிநாயகத்தின் குறிப்புகளில் இடம் பெற்றுள்ளது.

நல்லகாமன் வழக்கில் குற்றவாளி என்று பிரேம்குமார் அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவரை நீதிமன்றம்மன்னித்து விடுவித்தது. ஆனால் கன்னியாகுமரி வழக்கில் அவர் மீது சிபிசிஐடி எந்த வழக்கையும் பதிவுசெய்யாமல் கிடப்பில் போட்டு விட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றார் பிரேம்குமார். ஆனால் அவரது மனு அங்குதள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. வழக்கு உயிரோடு இருந்தாலும் அதற்கு எந்த உயிரும் இல்லாமல் அப்படியேகிடப்பில் போடப்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணி கொண்ட பிரேம்குமார் இப்போது காஞ்சி ஜெயேந்திரர் தொடர்புடைய சங்கரராமன் கொலைவழக்கை மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறார்.

பிரேம்குமார் மீதான இந்த பழைய விவகாரங்களை மேலும் கிண்டும் வேலையில் சுதேசி ஜாக்ரன் மன்ஞ் போன்றஅமைப்புகள் இறங்கியுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X