வழக்கறிஞர்களுக்கு நேர்மை தேவை: கற்பகவிநாயகம்
கடலூர்:
வழக்கறிஞர்களிடம் நேர்மையும், கடின உழைப்பும் இருக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம்தெரிவித்தார்.
கடலூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மறைந்த கடலூர் வழக்கறிஞர் நடராஜனின் உருவப்படத் திறப்பு விழா நடைபெற்றது. படத்தைதிறந்துவைத்து நீதிபதி கற்பகவிநாயகம் பேசியதாவது:
நான் வழக்கறிஞராக இருந்தபோது மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் வளர்ந்தபின்பு 10 பேரோடு அமர்ந்துதான் சாப்பிடுவேன். அதில்கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடில்லை.
நீதிபதி பதவியைத் தேடி நான் போகவில்லை. நேர்மை, கடின உழைப்பு, இறையருள் என்னை இந்தளவிற்கு உயர்த்தியது. இளம்வழக்கறிஞர்களுக்கு இந்த குணங்கள் வேண்டும்.
அநியாயமான முறையில் பெறும் வெற்றியைவிட, நேர்மையுடன் பெறும் தோல்வி சிறந்தது.
மூத்த வழக்கறிஞர்கள் அவமானப்படுத்துகிறார்களே என்ற அஞ்சக் கூடாது. உழைப்புதான் நமது நண்பன். வழக்கறிஞர்கள் ஜாதிக்குதிரையாக இருக்கவேண்டும். சாதிக்கும் குதிரையாக இருக்கவேண்டும்.
பதவியில் எத்தனைநாள் இருந்தோம் என்பதைவிட, என்ன சாதித்தோம் என்பதுதான் முக்கியம்.
நன்றி உள்ளவர்களாக வழக்கறிஞர்கள் இருக்கவேண்டும். வழக்கை உங்களிடம் கொடுத்தவர்களுக்கு நம்பிக்கை துரோகம்செய்துவிடக்கூடாது.
பணத்தைத்தேடி வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள் என்று கூறினார்.


