சிறை அதிகாரியுடன் மோதிய திருநாவுக்கரசர்
வேலூர்:
வேலூர் சிறைக்குச் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களை அழைத்துச் சென்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. எம்.பியுமானதிருநாவுக்கரசரின் காரை உள்ளே விட சிறை அதிகாரி மறுத்ததால், அவருடன் திருநாவுக்கரசர் கடும் வாக்குவாதம் செய்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் குழுவினரை வேலூர் சிறைக்கு திருநாவுக்கரசர் அழைத்துச் சென்றார்.
எம்.பிக்கள் குழுவினர் 3 தனிக் கார்களிலும், திருநாவுக்கரசர் தனிக் காரிலும் வந்தனர். சிறைக்கு வந்ததும், எம்.பிக்கள் கார்களை மட்டுமேஉள்ளே அனுமதிக்க முடியும் என்றும் திருநாவுக்கரசர் காரை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் துணை ஜெயிலர் பழனி தெரிவித்தார்.
இதனால் கடும் கோபமடைந்த திருநாவுக்கரசர், நான்தான் எம்.பிக்களை அழைத்து வந்துள்ளேன். ஆனால் நான் சிறைக்குள் செல்லப்போவதில்லை. காரை மட்டும் உள்ளே அனுமதித்தால் போதும் என்றார். இதை ஏற்க பழனி மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த திருநாவுக்கரசர், எனது கார் தான் முதலில் செல்லும், அதுவரை நான் காரை விட்டு இறங்க மாட்டேன் என்று கூறிவிட்டு காருக்குள்ளேயே அமர்ந்து விட்டார். மற்ற எம்.பிக்களின் கார்களும் பின்னாலேயே நின்றன.
இதைத் தொடர்ந்து துணை ஜெயிலர் பழனி, கண்காணிப்பாளரிடம் பேசினார். இதையடுத்து திருநாவுக்கரசர் தனது காரிலேயே சிறைக்குள்செல்ல அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மற்ற கார்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டன.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications