5க்கு முயன்றவர் கைது
உதகமண்டலம்:
4 திருமணங்கள் செய்து நான்கு மனைவிகளையும் பரிதவிக்க விட்டு விட்டு 5வது கல்யாணத்திற்கு ஏற்பாடுகள் செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் உம்மு. இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த முகம்மது நபி என்பவருக்கும் (40) கடந்த 2003ம் ஆண்டு மார்ச்மாதம் கல்யாணம் நடந்தது. திருமணத்தின்போது உம்மு குடும்பத்தினர் ரூ. 40,000 ரொக்கம், 5 பவுன் நகையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
கல்யாணம் ஆன சில மாதங்களில் முகம்மது நபி கேரளாவுக்குச் சென்று விட்டார். இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கூடலூர் வந்த அவர், மீண்டும்குடும்பம் நடத்த வேண்டுமானால் ரூ. 1 லட்சம் வரதட்சணை தர வேண்டும் என்று உம்முவிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவ்வளவு வரதட்சணை தர முடியாது என்று உம்முவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். மேலும், முகம்மது நபி குறித்து தேவாலா அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீஸார் முகம்மது நபியைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவர் ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து கொண்டு 3பெண்களையும் பரிதவிக்க விட்டவர் என்பது தெரியவந்தது.
உம்முவிடமிருந்து பிரிந்து கேரளாவில் இருந்தபோது அங்கு ருக்கியா என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துள்ளார் முகம்மது. தற்போது ருக்கியா கர்ப்பமாகஉள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், உம்முவிடமிருந்து பணத்தைப் பறித்த பிறகு கர்நாடக மாநிலத்தில் இன்னொரு பெண்ணையும் கல்யாணம் செய்ய அவர்திட்டமிட்டிருந்தார்.
முகம்மது நபியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications