சுனாமி கிரிக்கெட்: உலக லெவன் அணி வெற்றி
மெல்பர்ன்:
சுனாமியால் பதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட்போட்டியில் உலக லெவன் அணி, ஆசிய லெவன் அணியை 112 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
சுனாமி பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி திரட்டித் தருவதற்காக இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஐ.சி.சி முடிவு செய்தது.அதன்படி முதல் போட்டி இன்று மெல்போர்ன் நகரில் நடந்தது.
டாஸ் வென்ற உலக லெவன் அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். ஆட்டம் துவங்கும் முன்பு சுனாமியால்இறந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆசிய லெவன் அணிக்கு கங்குலி கேப்டனாக இருக்கிறார்.
உலக லெவன் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்தது. ரிக்கி பாண்டிங் 115 ரன்களும்,கெய்ர்ன்ஸ் 69 ரன்களும், லாரா 52 ரன்களும் எடுத்தனர். ஆசிய லெவன் அணி சார்பில் முரளிதரன் 3 விக்கெட்களையும், ஜாகீர்கான் இருவிக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய ஆசிய லெவன் அணி 39.2 ஓவர்களுக்கு 232 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் உலகலெவன் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய லெவன் அணியில் டிராவிட் 75 ரன்களும், ஷேவாக் 232 ரன்களும் எடுத்தனர். உலக லெவன் அணி சார்பில் வெட்டோரி 3விக்கெட்களையும், வார்னே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications