• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷீலா ராணி சுங்கத், கோவிந்த் அதிரடி டிரான்ஸ்பர்

By Staff
|

சென்னை:

Sheelaraniதமிழக அரசின் உள்துறைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் மற்றும் காவல்துறை டிஜிபி கோவிந்த் ஆகியோர் அதிரடியாகமாற்றப்பட்டுள்ளனர்.

சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஜெயேந்திரருக்கு எதிராகவலுவான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் அடுக்க காவல்துறை தவறிவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது.

புதிய உள்துறைச் செயலாளராக தற்போது டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தின் ஆணையராக உள்ள பவன் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் புதிய டிஜிபியாக இப்போது உளவுத் துறை டிஜிபியாக உள்ள ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

6 மாதங்களுக்கு முன் போலி முத்திரைத் தாள் விவகாரம் மற்றும் கோவை தொடர் குண்டு வெடிப்புக் குற்றவாளி மதானிக்கு சென்னை அரசுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பரிந்துரைத்தது ஆகிய செயல்களுக்காக உள்துறைச் செயலாளராக இருந்த சையத் முனீர் ஹோதாமாற்றப்பட்டபோது, சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த ஷீலா ராணி அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார்.

காவல் துறையைக் கட்டுப்படுத்தும் சென்சிட்டிவான துறை இது. ஷீலா ராணி உள்துறைப் பொறுப்பில் இருந்தபோது தான் வீரப்பன்எண்கெளன்டர், சங்கராச்சாரியார் கைது போன்ற அதிரடி சம்பவங்கள் நடந்தன.

ஆனால், சங்கராச்சாரியார் விவகாரத்தில் ஷீலாவின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை என்பதால் இன்று அவர் திடீரெனமாற்றப்பட்டார்.

ஷீலா ராணி சுங்கத் மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த சுந்தரத்தேவன் வருவாய்த்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். (இவர் சசிகலாகுடும்பத்துக்கு வேண்டியவர் என்பதை நினைவில் கொள்க).

வருவாய்த்துறைச் செயலாளராக இருந்த சதபதிக்கு மின்துறைச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது.

டிஜிபி கோவிந்த் அதிரடி மாற்றம்:

DGP Alexanderஇதே போல தமிழக டிஜிபியாக இருந்த கோவிந்த் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக உளவுத் துறை டிஜிபியாக வந்தஏ.எக்ஸ். அலெக்சாண்டர் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவிந்த்துக்கு டப்பா பதவியான போலீஸ் வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி தரப்பட்டுள்ளது.

அலெக்சாண்டர் டிஜிபியானதைத் தொடர்ந்து இதுவரை அவர் கவனித்து வந்த உளவுப் பிரிவு டிஜிபி பொறுப்பை, அத் துறையின்ஐ.ஜியான ராமானுஜம் தற்காலிகமாக கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை போலீஸ் வீட்டு வசதி வாரியத் தலைவர் பதவியில் இருந்த நெயில்வால், சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார். குற்றப்பிரிவு டிஜிபி பதவியையும் அவர் கூடுதலாக கவனித்து வருவார். இவரும் முன்னாள் தமிழக டிஜிபியாகஇருந்தவரே என்பது நினைவுகூறத்தக்கது.

இதற்கிடையே உளவுத் துறையின் தலைவராக இருந்து அதிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளவெங்கடகிருஷ்ணனை பனிஷ்மெண்ட் ஏரியாவாகக் கருதப்படும் மண்டபம் அகதிகள் முகாம் இன்சார்ஜ் ஆக தூக்கியடிக்கவும்திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

DGP Govindமுன்பு அலெக்ஸாண்டர் கூட மண்டபம் முகாம் பதவியில் தான் வைக்கப்பட்டிருந்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப்பின்னர் அரசு நிர்வாகத்தில் தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்து வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 19 நாட்களுக்கு முன்னர் தான்அலெக்ஸாண்டரை மீண்டும் உளவுப் பிரிவு டிஜிபியாக நியமித்தார். இப்போது மாநில காவல்துறை டிஜிபியாக்கப்பட்டுள்ளார்.

சங்கராச்சாரியார் விவகாரத்தைக் கையாளும் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள்அனைவரும் படிப்படியாக கழற்றிவிடப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரே நாளில் உள்துறைச் செயலாளரும், மாநில காவல்துறைத் தலைவரும் (டிஜிபி) அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டது கோட்டைவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X