வீடியோ ஆதாரம் மோசடியானது: ஜெயேந்திரர்
காஞ்சிபுரம்:
சன் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளுக்குத் தரப்பட்ட வீடியோ டேப் மோசடி செய்யப்பட்ட ஒன்று என சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
போலீஸ் காவலில் இருந்தபோது ஜெயேந்திரர் அளித்த வாக்குமூலத்தின் ஒரு பகுதி அடங்கிய வீடியோ டேப் நேற்று சன் டிவி உள்ளிட்டசில தொலைக்காட்சிகளுக்கு லீக் செய்யப்பட்டது. விஜயேந்திரரை ஜெயேந்திரர் மிகக் கடுமையாக விமர்சிக்கும் பகுதி மட்டுமே லீக் ஆனது.
இந்த வீடியோ குறித்து சங்கராச்சாரியாரின் சார்பில் காஞ்சி தனிப்படை போலீசாருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார் அவரது வழக்கறிஞர்சண்முகம். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
போலீஸ் காவலில் இருந்தபோது ஜெயேந்திரர் ஏதோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மாதிரி இந்த வீடியோ டேப் வெட்டி, ஒட்டி மோசடிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயேந்திரரின் புகழைக் குறைக்கவும், அவரது பக்தர்களின் மனதைப் புண்படுத்தவும்முயற்சிக்கப்பட்டுள்ளது.
இது முழுக்கவும் மோசடியான வீடியோ. இந்த வீடியோவில் உள்ள எதையும் கூறவில்லை என ஜெயேந்திரர் மறுக்கிறார் என்றுகூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் டப்பிங், வசனம்:
இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதா தன் கடந்த கால கவர்ச்சிக் கனவு தொழிற்சாலை அனுபவங்களை பயன்படுத்தி நல்ல ஒரு காட்சி, கதை, வசனம், டப்பிற்அமைத்து குறும்படம் (ஜெயேந்திரர் வீடியோ) வெளியிட்டுள்ளார்.
அந்தக் காலத்தில் அவர் கதாநாயகியாக நடித்தார். இன்று ஓட்டுக்காக வில்லியாக மாறிவிட்டார். குரு-சிஷ்யர்களானஜெயேந்திரர்-விஜயேந்திரரைப் பிரிக்க சதி செய்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமயண சூர்ப்பனகையின் மறுஅவதாரமாகிவிட்டார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications