For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் டாக்டர் புகார்: தளவாய் சுந்தரம் பதில் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெண் டாக்டர் கோமதி தன் மீது பொய்யான புகாரைக் கூறியுள்ளார். அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழகசுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் கோமதி என்பவர், சுகாதார அமைச்சர் தளவாய் சுந்தரம்தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்பது உள்ளிட்ட புகார்களைக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக கோமதி குற்றம் சாட்டிய அரசு அதிகாரிகள் தங்களது பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில் அமைச்சர்தளவாய் சுந்தரம் இன்று தனது பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், டாக்டர் கோமதி பொய்யான புகார்களைக் கூறுவது புதிதல்ல. இது அவரது வாடிக்கையான செயல். அந்த அடிப்படையில்தான் என்மீதும் பொய்யான புகார்களைக் கூறியுள்ளார். பொறுப்புள்ள பதவியில் உள்ளவர்களைக் கேவலப்படுத்தும் நோக்கத்தில் சிறிய அளவில்நீதிமன்றக் கட்டணத்தை செலுத்தி விட்டு இதுபோன்ற புகார்களைக் கூறியுள்ளார்.

தான் மிகவும் அழகாக உள்ளதாகவும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக தனதுசாதியையும் அவர் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

பொய்யான புகார்களைக் கூறுவதற்காக தன்னையே அவமானப்படுத்திக் கொண்டு பிறர் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களைக்கூறியுள்ளார்.

இப்படிப்பட்டவர்களை ஊக்குவித்தால் யாரும் அரசியலுக்கோ, பொது வாழ்வுக்கோ வர முடியாது. ஏற்கனவே இவர் இடமாற்றத்தைஎதிர்த்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது பாலியல் புகார்களைக் கூறவில்லை. இடமாற்றம் செய்யக் கூடாது, ஒரே இடத்தில்இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் மீது பொய் புகார்களை அள்ளி வீசுகிறார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இலலை என்று கூறியுள்ளார்தளவாய் சுந்தரம். இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X