For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி: ஜெவிடம் ரூ. 109 கோடி குவிந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுனாமி நிவாரணத்திற்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் பல்வேறு தரப்பினர் அளித்த நன்கொடை ரூ.110 கோடியை எட்டியுள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள்ஆகியோர் ஜெயலலிதாவிடம் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

இந் நிலையில் செய்தி விளம்பரத் துறை சார்பில் அமைச்சர் அன்பழகன் ஜெயலலிதாவிடம் ரூ.50 லட்சம் வழங்கினார். வனத்துறை சார்பில்அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.44 லட்சம் வழங்கினார்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் ரூ.25 லட்சம், எல்காட் தொழிலாளர்கள் சார்பில் ரூ.86,190, தமிழ் இணைய பல்கலைக்கழகஅலுவலர்கள சார்பில் ரூ.6,377, பாத்தி இன்போடெல் சார்பில் ரூ.10 லட்சம் ஆக மொத்தம் ரூ.35.92 லட்சத்துக்கான காசோலையை தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெயக்குமார் முதல்வரிடம் வழங்கினார்.

கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட், பிரீமியம் எனர்ஜி டிரான்மிஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ரூ.35 லட்சம் நிதி ஜெயலலிதாவிடம்வழங்கப்பட்டது.

தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.21 லட்சத்தை அத் துறை அமைச்சர் அண்ணாவி வழங்கினார். சிஇஎஸ் ஓனிக்ஸ் நிறுவனம் சார்பில்அதன் இயக்குநர் பாட்ரிக் ஹூவர்ட் ரூ.20 லட்சம் வழங்கினார்.

சர்வோதய சங்கம், கைத்தறித்துறை, டான் சில்க் ஆகியவற்றின் சார்பில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் வளர்மதி ரூ.16 லட்சம் அளித்தார்.

இந்திய விவசாயிகள் கூட்டுறவு சங்கம் சார்பில் அதன் விற்பனை மேலாளர் கோவிந்தராஜன் ரூ.10 லட்சத்தை ஜெயலலிதாவிடம்வழங்கினார்.

இதுதவிர அமர ராஜா பேட்டரீஸ் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும், அசோக் லேலண்ட் நிறுவனத் தொழிலாளர்கள் சார்பில் ரூ.8 லட்சமும்பெட்ரோலியம் விநியோகஸ்தர்கள் சார்பில் ரூ.5 லட்சமும் முதல்வரிடம் வழங்கப்பட்டது.

இதுவரை சுனாமி நிவாரணத்துக்காக பல்வேறு தரப்பினர் ஜெயலலிதாவிடம் அளித்த நிவாரணத் தொகை ரூ.109 கோடியை எட்டியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X