இராக்கில் தேர்தல்: வன்முறையில் 27 பேர் பலி
பாக்தாத்:
இராக்கில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவை சீர்குலைக்க இரு இடங்களில் நடந்த தற்கொலைப்படைத்தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
அதிபர் சதாம் ஹூசேனின் ஆட்சியில் தேர்தல்கள் நடந்தாலும் அவை ஜனநாயகரீதியில் சுதந்திரமாக நடக்கவில்லை. இப்போதுஅமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தேர்தல் நடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் சுதந்திரமான முறையில் இங்கு நடைபெறும் முதல்தேர்தல் இதுவாகும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இராக்கின் இடைக்கால அதிபராக பதவி வகிக்கும் காஸி அல் யாவர் முதலில்வாக்களித்தார். அவர் வாக்களிக்க வந்தபோது, அடையாளம் சரிபார்க்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தத் தேர்தல் உலகுடன் இராக் இணைவதற்கு முதல் படியாகும் என்றார்.
இடைக்கால பிரதமர் அயத் அல்லாவி வாக்களித்த பின்பு நிருபர்களிடம் பேசுகையில், முதல் முறையாக இராக் மக்கள் தங்கள்தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றார்.
நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் மற்ற அரசு கட்டடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்களின் அடையாளம்சரிபார்க்கப்பட்ட பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இடைவிடாது நடக்கும் வன்முறை, தீவிரவாதிகள் தாக்குதால் தேர்தலுக்குப் பின் அமையும் அரசிடம் நிர்வாகத்தைஒப்படைத்துவிட்டு இராக்கை காலி செய்யும் முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது. ராணுவத்தையும் வாபஸ் பெறும் முடிவில்அமெரிக்கா உள்ளது.
ஆனால், அமெரிக்கப் படைகள் வெளியேறினால் இராக்கில் உள்நாட்டுப் போர் வெடிக்கலாம் என பல நாடுகளும் அச்சம்தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொம்மை அரசைத் தேர்வு செய்யவே இந்த தேர்தல் நடப்பதாகக் கூறியுள்ளதீவிரவாதிகள், தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, தேர்தலைத் தடுக்கவும் மும்முரம்காட்டி வருகின்றனர்.
4 இடங்களில் வாக்குச்சாவடியில் நடந்த தற்கொலை படைத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும், சன்னி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பலூஜா, ரமாடிமற்றும் சமர்ரா நகரின் மேற்குப் பகுதி மற்றும் பாக்தாதின் வடக்குப் பகுதியில் வாக்குப்பதிவு மிக மந்தமாகவே காணப்பட்டது.
இந்தப் பகுதிகளில் அமெரிக்க ராணுவத் துருப்புகள் மற்றும் இராக் ராணுவத்தினர் ரோந்து வாகனங்களில் சுற்றியபடி, வாக்களிக்கவருமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். இருப்பினும் தீவிரவாதிகளின் தாக்குதல் பயத்தால் இராக் தெருக்கள்வெறிச்சோடிக் கிடக்கின்றன.அதிபர் சதாம் ஹூசேனின் ஆட்சியில் தேர்தல்கள் நடந்தாலும் அவை ஜனநாயகரீதியில் சுதந்திரமாக நடக்கவில்லை. இப்போதுஅமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தேர்தல் நடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் சுதந்திரமான முறையில் இங்கு நடைபெறும் முதல்தேர்தல் இதுவாகும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இராக்கின் இடைக்கால அதிபராக பதவி வகிக்கும் காஸி அல் யாவர் முதலில்வாக்களித்தார். அவர் வாக்களிக்க வந்தபோது, அடையாளம் சரிபார்க்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தத் தேர்தல் உலகுடன் இராக் இணைவதற்கு முதல் படியாகும் என்றார்.
இடைக்கால பிரதமர் அயத் அல்லாவி வாக்களித்த பின்பு நிருபர்களிடம் பேசுகையில், முதல் முறையாக இராக் மக்கள் தங்கள்தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றார்.
நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் மற்ற அரசு கட்டடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்களின் அடையாளம்சரிபார்க்கப்பட்ட பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இடைவிடாது நடக்கும் வன்முறை, தீவிரவாதிகள் தாக்குதால் தேர்தலுக்குப் பின் அமையும் அரசிடம் நிர்வாகத்தைஒப்படைத்துவிட்டு இராக்கை காலி செய்யும் முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது. ராணுவத்தையும் வாபஸ் பெறும் முடிவில்அமெரிக்கா உள்ளது.
ஆனால், அமெரிக்கப் படைகள் வெளியேறினால் இராக்கில் உள்நாட்டுப் போர் வெடிக்கலாம் என பல நாடுகளும் அச்சம்தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொம்மை அரசைத் தேர்வு செய்யவே இந்த தேர்தல் நடப்பதாகக் கூறியுள்ளதீவிரவாதிகள், தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, தேர்தலைத் தடுக்கவும் மும்முரம்காட்டி வருகின்றனர்.
4 இடங்களில் வாக்குச்சாவடியில் நடந்த தற்கொலை படைத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும், சன்னி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பலூஜா, ரமாடிமற்றும் சமர்ரா நகரின் மேற்குப் பகுதி மற்றும் பாக்தாதின் வடக்குப் பகுதியில் வாக்குப்பதிவு மிக மந்தமாகவே காணப்பட்டது.
இந்தப் பகுதிகளில் அமெரிக்க ராணுவத் துருப்புகள் மற்றும் இராக் ராணுவத்தினர் ரோந்து வாகனங்களில் சுற்றியபடி, வாக்களிக்கவருமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். இருப்பினும் தீவிரவாதிகளின் தாக்குதல் பயத்தால் இராக் தெருக்கள்வெறிச்சோடிக் கிடக்கின்றன.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!

Click it and Unblock the Notifications