For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் பட்ஜெட் தாக்கல்: புதிய வரிகள் இல்லை- அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு புதிய வரிகள் ஏதும் இல்லாத, ரூ. 260.41 கோடி பற்றாக்குறை கொண்டபட்ஜெட்டை தமிழக அரசு இன்று தாக்கல் செய்தது.

2005-06ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 1.4.2005 முதல் கூடுதல் அக விலைப்படி வழங்கப்படும்.

எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 85 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில போக்குவரத்துக் கழங்களுக்கு 2,000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறைக்கு ரூ 39.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி உதவியாளர் நிலை-1, சத்துணவு உணவு உதவியாளர்கள்-1 ஆகியோருக்கு தொகுப்பூதியத்தில் ரூ. 330உயர்த்தப்படும். சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வு நிதியாக ரூ. 20,000 வழங்கப்படும்.

சுனாமி நிவாரணத்துக்கு ரூ 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுனாமியால் சேதமடைந்த மீன்பிடிதுறைமுகங்களை சீரமைக்க ரூ 9.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 8,000 கோடியை தாண்டிவிட்டது. சென்னை சோழிங்கநல்லூரில் அறிவு சார்தொழில் நகரியம் அமைக்கப்படவுள்ளது.

செட்டிநாடு (காரைக்குடி உள்பட), பிச்சாவரம், பழவேற்காடு ஆகியவை ரூ 3.65 கோடியில் சுற்றுலா மையங்களாகமேம்படுத்தப்படும்.

கட்டமானத் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு 1,339.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 48 கோடியில் வண்டலூர் அருகே புதிய காவலர்பயிற்சிக் கழகம் அமைக்கப்படும். தரமணியில் ரூ. 30 கோடியில் புதிய டிஜிபி அலுவலகம் கட்டப்படவுள்ளது.

2 லட்சம் கிராமப்புற ஏழைகளுக்கு ரூ. 50 கோடியில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்படவுள்ளன.

ஏரிகளை ஆழப்படுத்த ரூ. 62.50 நிதியும், கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு ரூ. 1.85 கோடியில் 5005 முகாம்கள்நடத்தவும், மேலும் 800 புதிய கால்நடை மருத்துவமனைகள் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 12.72 கோடி செலவிடப்படவுள்ளது.

சிறைச் சாலைகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைக்க ரூ. 8.61 கோடியும், சிறைச் சாலைகளை நவீனப்படுத்தரூ. 11.78 கோடியும், தீயணைப்பு துறையை நவீனப்படுத்த ரூ. 68.55 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீதித்துறைக்கு ரூ. 193.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நத்தத்தில் புதிய நீதித்துறை நடுவர் மன்றம்ஏற்படுத்தப்படும். ரூ. 1.18 கோடியில் நெல்லை சட்டக் கல்லூரி மாணவிகளுக்கு புதிய விடுதி கட்டப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ 65.34 கோடியில் ஓசூர், ஊட்டி, தேனியில் வேளாண் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. மழை நீர் சேகரிப்பைவிரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு ரூ.854.41 கோடி ஒதுக்கீடாகியுள்ளது.

சத்துணவுத் திட்டத்திற்கு ரூ. 742.22 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களின் எலும்பு வளர்ச்சிக்காகசத்துணவில் கரிவேப்பிலைப் பொடி அல்லது முருங்கைக்கீரைப் பொடி சேர்க்கப்படும்.

இத்தனை புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.

இதனால் பற்றாக்குறை ரூ. 260.41 கோடியாக இருக்கும். இதை வரிச் சீர்திருத்தம் மற்றும் உரிய வரி வசூல் மூலம் அரசு ஈடுசெய்யும் என பொன்னையன் அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X