For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளங்கோவனை காட்டிக் கொடுத்த காங்கிரஸ் எம்எல்ஏ!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சத்தியமூர்த்தி பவனில் தன்னைப் பற்றிய இளங்கோவன் பேச்சு விவரத்தை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. தான் டைப் செய்துதன்னிடம் கொடுத்தார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஒரு வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களது செயல் திட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.நடவடிக்கை என்பது எச்சரிக்கையாக இருக்கலாம். இனிமேல் இத்தகைய விரும்பத்தகாத செயல்கள்நடைபெறக்கூடாது என்கின்ற கண்டிப்பான அறிவுரையாகவும் இருக்கலாம்.

திருக்குறளில் ""கடிதோச்சி மெல்ல எறிக என்ற ஒரு அறிவுரை வலியுறுத்தப்படுகிறது. அதை நான் மறப்பவனல்ல.

இளங்கோவன் என்னை இழிவாக பேசியதாக கூறினார்கள். அதற்காக நான் வருத்தப்படுவது வேறு விவகாரம்.ஆனால் என்னுடைய கட்சித் தோழர்களும், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்கள்.

காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு எம்.எல்.ஏ.வே, இளங்கோவன் பேசிய பேச்சை தட்டச்சு செய்து திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களிடம் தந்தார்.

காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ரகசியக் கூட்டமாகவே இருந்தாலும், அதில் பேசப்பட்டவை அவதூறாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.அதை பொருட்படுத்தாமல் இருக்க முடியுமா? அவர், கூட்டத்தில் என்னைப் பற்றி பேசிய அதே நாளில்,பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ""யாரோ ஒருவர் முதலமைச்சராக நாங்களெல்லாம் கஷ்டப்பட வேண்டுமாஎன்று ஆத்திரத்தோடு கேட்டுள்ளார்.

இது திமுகவுக்கும்,காங்கிரஸுக்கும் இடையே உள்ள சுமூகமான உறவுக்கு ஊனம் விளைவிக்கக் கூடியது என்பதைஉணர வேண்டும்.

மத்தியில் திராவிடக் கட்சிகளுக்கு பங்களிக்காமல், காங்கிரஸ் கட்சியே பலமுறை ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. அப்போதெல்லாம்நாங்கள் யாரும் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. 1971ல் திமுக சார்பில் 24 எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால் நாங்கள் பங்குகேட்கவும் இல்லை, பெறவும் இல்லை.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்றிருக்கிறோம் என்பதற்காக மாநிலத்தில் கூட்டணி ஆட்சி என்று கோர முடியாது. அதற்கு இது பிரதிஉபகாரமாக இருக்க முடியாது. கேரளம், மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்களில் தனிப்பெரும் மெஜாடிரிட்டி கிடைக்காதபோதுதான்கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் தனிப் பெருன்பான்மை கிடைக்காதபோது கூட்டணி ஆட்சி குறித்து யோசிக்கலாம், யோசிப்போம்.

எங்களது கூட்டணியில் சலசலப்பும், உரசல்களும் வெளிப்படுவதற்கு, ஆளுங்கட்சியும், எங்களுடையமுற்போக்கான கருத்துகளை முடக்கிப்போட வேண்டும் என்று கருதும் பழமைவாதிகளும் தான் காரணம்.

கூட்டணி சிதற வேண்டும் என்று அதிமுக நினைக்கிறது. அதற்கான ஆயத்தங்களை காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு அது செய்துவருகிறது. இப்போது திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரால் ஒட்டப்படுவதாக கூறப்படும் போஸ்டர்களைக் கூடஆளுங்கட்சியினரும் போலீசாரும் ஒட்டியவை தான். அந்த போஸ்டர்களே போலீஸாரின் தயாரிப்பு என்று தான் நான் சந்தேகப்படுகிறேன்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் முக்கியமானவைதான். காரை விட ஸ்டியரிங் சிறியதாக இருக்கிறதுஎன்பதற்காக அதை முக்கியமற்றது, தேவையற்றது என்று சொல்லி விட முடியுமா?

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இளங்கோவன் மாறுவார் என்று நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X