டாக்டர் கிருஷ்ணசாமியின் வேனில் அரிவாள்கள் பறிமுதல்
வேலூர்:
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் பாதுகாப்புக்காக வந்த வேனை சோதனை செய்த போலீஸார்,அதிலிருந்து 3 வீச்சரிவாள்களைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வேலூர் வந்தார். அவருக்குப் பாதுகாப்பாக ஒரு டெம்போ டிராவலர் வேன் உடன் வந்தது. காருக்குமுன்னும் பின்னும் ஏராளமான வாகனங்களும் வந்தன.
காவேரிப்பாக்கம் அருகே உள்ள சோதனைச் சாவடி பகுதியில் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு இந்தக் கார்கள் சென்றன. இவற்றைநிறுத்துமாறு போலீஸார் சைகை காட்டியும் இவை நிற்கவில்லை.
இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். வி.சி.மேட்டூர் என்ற இடத்தில் ரோந்துப் போலீஸார் வாகனங்களை தடுத்துநிறுத்தினர். கிருஷ்ணசாமியின் காரைப் பின் தொடர்ந்து பாதுகாப்புக்காக வந்த வேன் டிரைவரை தடுத்து நிறுத்தி போலீஸார்சோதனையிட்டபோது, அதில் 3 வீச்சரிவாள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் அதில் இருந்த 7 பேரையும் கைது செய்தனர். வாகனத்தை வேகமாகஓட்டியது, பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது ஆகிய குற்றத்திற்காக வேனில் இருந்த கனகராஜ், சந்திரசேகரன், சரவணன்,கார்மேகம், சந்திரன், பாண்டி, ரவி ஆகியோர் மீது வாலாஜாபேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications