• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓ.பி தம்பியின் மரக் கடத்தல்: பழிவாங்கப்பட்ட அதிகாரிக்கு மீண்டும் வேலை- நீதிமன்றம் ஆணை

By Staff
|

சென்னை:

மரங்களை சட்ட விரோதமாக வெட்டி, அதை கேரளாவுக்கு கடத்திய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா மீது நியாயமானநடவடிக்கை எடுத்ததற்காக கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட பெரியகுளம் வனச் சரகர் ராஜேந்திரனை 1 மாதத்திற்குள் மீண்டும் வேலையில்சேர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரிகுளம், தேனி பகுதியில் இருந்து ஏராளமான தேக்கு மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன.இதையடுத்து கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதியன்று 20 பேரை அதிரடியாக கைது செய்தார் ராஜேந்திரன்.

அவர்களில் இருவர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மிகவும் நெருங்கியவர்கள். மேலும் ஓ.பியின் தம்பிராஜாவுக்கும் இந்த மரம் கடத்தலில் நெருங்கிய தொடர்பு இருப்பதும் உறுதியானதையடுத்து அவரையும் சட்டப்படி தண்டிக்க முடிவுசெய்தார் ராஜேந்திரன்.

ராஜாவை அவர் கைது செய்ய திட்டமிட்ட நிலையில், ஆகஸ்ட் 25ம் தேதி பணியிலிருந்து திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்ராஜேந்திரன்.

அவர் மீது தமிழக அரசு பல்வேறு குற்றச் சாட்டுக்களை சுமத்தியது. சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், அரசு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து ஆகஸ்ட் 31ம் தேதி பதவி சஸ்பெண்ட் உத்தரவை அரசு வாபஸ் பெற்றது. ஆனால், அவருக்கு மீண்டும் வேலை கொடுத்தகையோடு, செப்டம்பர் 11ம் தேதி ராஜேந்திரனுக்கு பணியிலிந்து கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்த மனுவில்,அரசுப் பணத்தை ராஜேந்திரன் கையாடல் செய்தார். உயர் அதிகாரிகளிடம் அவமரியாதையாக நடந்து கொண்டார். அவர் மீது 4குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அதன் அடிப்படையில்தான் ராஜேந்திரன் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தலித் ஒருவரை ஜாதியைச் சொல்லி திட்டியதாக ராஜேந்திரன் மீது திடீரென போலீசார் வழக்கையும் பதிவு செய்து அவரைவன்கொடுமை சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

மரம் வெட்டிக் கடத்திய ஓ.பி தம்பி மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற ஒரே காரணத்திற்காக ராஜேந்திரனை இந்தப் பாடுபடுத்தியதுதமிழக அரசு. (சென்னையில் மரக் கிளையை ஒடித்து அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தியதாக ஆற்காடு வீராசாமியின் தம்பி மீது முதல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டியது நினைவுகூறத்தக்கது).

தான் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வனச் சரகர் ராஜேந்திரன்.

இதை விசாரித்த நீதிபதி பி.கே.மிஸ்ரா, ராஜேந்திரனுக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு விவரம்:

ராஜேந்திரன் மீதான புகார்களை துறைரீதியாக விசாத்து முடிக்கும் முன்பே அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து அரசு தண்டித்துள்ளது. அவர்தவறு செய்தாரா, இல்லையா என்பது குறித்து தெரிய வரும் முன்பே அவரை தண்டித்தது, இயற்கைக்கு விரோதமானது, பணிவிதிமுறைகளுக்கு எதிரானது.

அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் மீது ராஜேந்திரன் புகார் கூறியவுடன் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதுதெரிய வருகிறது. அவரை அடக்கி வைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறி தற்காலிக பணி நீக்கம் செய்து பின்னர் கட்டாய ஓய்வும்அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அரசின் நடவடிக்கை எதேச்சதிகாரமானது. எனவே அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.அவருக்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் வேலை தர வேண்டும்.

அவருக்கு 1 மாத சம்பளத்தையும் தர வேண்டும். அவர் மீதான துறைரீதியான விசாரணையை சட்டப்படி தொடர்ந்து நடத்தி முடிக்கலாம்என்று தீர்ப்பில் கூறியுள்ளார் நீதிபதி மிஸ்ரா.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X