For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி கிராமங்கள்: பாரபட்ச மறுமணங்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை/கடலூர்/நாகை:

மறு சுனாமியில் இருந்து அதிர்ஷ்டவசமாக மக்கள் தப்பிவிட்டாலும், முதல் சுனாமி ஏற்படுத்திய சோகத்திலிருந்து பாதிக்கப்பட்டபகுதி மக்கள் இன்னும் முழுவதுமாய் விடுபடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மனைவிகளை இழந்த பல ஆண்கள் மறுமணம் புரிந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கி வருகின்றனர். ஆனால் கணவர்களைஇழந்த பெண்களுக்கு இந்த உரிமை பல இடங்களில் மறுக்கப்பட்டுள்ளது அல்லது அதற்குரிய வாய்ப்புகள்ஏற்படுத்தப்படாமலேயே உள்ளன.

Tsunami
சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்கள்தான். அதிக பாதிப்புக்குள்ளான பகுதி நாகை மாவட்டம்தான். இங்குமட்டும் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரழந்தனர். நாகையில், சுனாமிக்கு மனைவிகளை இழந்த, கீச்சாங்குப்பம், தரங்கம்பாடி,அக்கரைப்பேட்டை ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் மறு மணம் புரிந்து கொண்டுள்ளனர்.

குழந்தைகளுக்காக என்ற காரணத்தைக் கூறி இந்த மறுமணங்கள் நடந்துள்ளன. மறுமணம் புரிந்த பலருக்கு 20 வயதில் கூடகுழந்தைகள் உள்ளனர். அவர்களும், "குழந்தையை வளர்ப்பதற்காக" என்று கூறி மறுமணம் புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி மறுமணம் செய்துள்ள பெரும்பாலான ஆண்கள் 20 வயதுக்குட்பட்ட பெண்களைத்தான் திருமணம் செய்து வருகிறார்கள்.தங்களது பெண்களை இந்த மீனவர்களுக்குக் கட்டித் தர மீனவ சமூக பெற்றோர்களுக்கு இடையே கடும் போட்டியும் நிலவுகிறது.

அதேசமயம், கணவர்களை இழந்த பெண்கள் மறுமணம் செய்ய எந்த ஆதரவும் மீனவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. ஒருவிதவை கூட இதுவரை மறுமணம் செய்ததாக தகவல் இல்லை என்று தன்னார்வ நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.

Tsunami affected Nagapattinam street
இதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் ரிெயவில்லை என்றாலும், மீனவர்களிடையே விதவை மறுமணத்திற்கு அனுமதி இல்லைஎன்று பொதுவாகக் கூறப்படுகிறது.

ஆனால் சுனாமிக்கு மனைவிகளை இழந்த ஆண்கள், சின்னப் பெண்களாக பார்த்து பார்த்து கல்யாணம் செய்து வரும் நிலையில்,கணவனை இழந்த விதவைப் பெண்ணுக்கு அந்த உரிமை மறுக்கப்படுவது இப்பகுதியில் பெரும் ஆண்-பெண் ஏற்றத்தாழ்வைமேலும் விரிவாக்கம் என தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளன.

சுனாமி விதவைகள், தங்களது குழந்தைகளை மட்டுமல்லாது, சுனாமியால் சகோதர, சகோதரிகள் யாராவது இறந்திருந்தால்அவர்களது குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விதவைகளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், கிராமத்தில் அவர்களுக்கு பல விஷயங்களில் சலுகை காட்டுகிறார்கள் என்பது தான்.கந்துவட்டிக்காரர்கள் கூட குறைந்த விகிதத்தில் கடன் கொடுக்கிறார்கள் (அதாவது மற்றவர்களுக்கு 10 சதவீத வட்டி என்றால்இவர்களுக்கு 5 சதவீத வட்டியில்).

ஊர்க்காசு என்ற பெயரில் பொது நிதி வசூலிக்கப்பட்டு அதிலிருந்து விதவைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதேபோலமீன்களை ஏலம் எடுப்பதற்கும் விதவைப் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இருப்பினும், ஆண்கள் மட்டும் புதிய வாழ்க்கையை தேடிக் கொள்ள, பெண்களுக்கு அந்த வாழ்வு மறுக்கப்பட்டே வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X