• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீனாட்சி கோவில் உலக அதிசயமானதாக வதந்தி!

By Staff
|

மதுரை:

உலக அதியசங்களுள் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக செல்போன்கள் மூலம்மதுரையில் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய 7 உலக அதிசயங்களை தேர்வு செய்வதற்கான கருத்துக் கணிப்பு இணைய தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப்பட்டியலில் இந்தியாவிலுள்ள தாஜ்மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள், கோவில்கள்,வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் மதுரையில் செல்போன் வைத்திருந்தவர்களுக்கு நேற்று எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு செய்தி வந்தது. அதில்,மீனாட்சி அம்மன் கோவில் உலக அதிசயமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், மதுரையில் புதிய பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த எஸ்.எம்.எஸ். தகவல் வதந்தி எனப் பின்னர் தெரியவந்ததால்பரபரப்பு அடங்கியது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X