ஆட்டோவில் வந்த அன்பழகன்!
சென்னை:
திமுக மற்றும் அதிமுகவினர் மாறி மாறி மேற்கொண்ட மறியல் போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்துநெருக்கடியில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் சிக்கிக் கொண்டார். இதனால் அவர் கூட்டணிக்கட்சிக்கூட்டத்திற்கு ஆட்டோவில் வந்தார்.
மாநகராட்சி இடைத் தேர்தலில் திமுகவினர் முறைகேடு செய்ததாக அதிமுகவினரும், அதிமுகவினர் கள்ளஓட்டுப் போட்டதாக திமுகவினரும் புகார் கூறி சென்னை நகரின் முக்கியச் சாலைகளான அண்ணா சாலை, ஒயிட்ஸ்சாலை உள்ளிட்ட சாலைகளில் திடீர் சாலை மறியல் மேற்கொண்டதால் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகபோக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் தேங்கிக் கிடந்தன. அண்ணா சாலையில்சைதாப்பேட்டையில் ஆரம்பித்து அண்ணா சிலை வரை போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. அண்ணாசாலையை ஒட்டிய முக்கியச் சாலைகளான நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைஉள்ளிட்ட சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த போக்குவரத்து நெருக்கடியில் பொதுமக்களைப் போலவே திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் சிக்கிக்கொண்டார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அறிவாலயம் செல்வதற்காக அவர்தனது அண்ணா நகர் வீட்டிலிருந்து காரில் கிளம்பினார்.
அப்போது சாஸ்திரி பவன் அருகே போக்குவரத்து நெருக்கடியில் அவர் சிக்கிக் கொண்டார். இதனால்திருமலைப்பிள்ளை சாலை வழியாக கார் திரும்பியது.
ஆனால் அங்கும் நெரிசல் ஏற்பட்டதால் காரிலிருந்து இறங்கிய அன்பழகன் அப்படியே நடந்து செல்ல முடிவுசெய்தார். சாலையில் நடந்து வந்த அன்பழகனை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
ஆனால் ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் அனுதாபத்துடன் பார்த்து, அவரிடம் விரைந்து சென்று, "அய்யா வாங்கஅறிவாலயத்திற்கு நான் கொண்டு சேர்க்கிறேன் என்றார். "எப்படிப்பா ஆட்டோ இந்த கூட்டத்தில போகும் என்றகேட்ட அன்பழகனிடம்,
இல்லை அய்யா, வாங்க நான் கொண்டு போய் விடுகிறேன் என்று கூறிய ஆட்டோ டிரைவர், பல்வேறு சந்துபொந்துகளில் புகுந்து ஒரு வழியாக அன்பழகனை அறிவாலயம் கொண்டுவந்து சேர்த்தார்.
அரசியல் கட்சிகளின் திடீர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலால் பொதுமக்கள் படும் பாட்டை அரசியல் தலைவர்கள்நேற்று அனுபவப் பூர்வமாக நேரில் உணர்ந்து கொண்டனர் என்பதை அவர்களது முகங்களே தெளிவாகக்காட்டியது.
திமுக, அதிமுகவினரின் சாலை மறியல் போராட்டம் தலைநகர்வாசிகளை நேற்று பெரும் அதிருப்தியில்ஆழ்த்தியது. வேலைக்குப் போக வந்தவர்கள், வேலை நிமித்தமாக வெளியில் வந்தவர்கள், மாணவர்கள்,பெண்கள், வயோதிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
இந்த மறியல் போராட்டம் அரசியல் கட்சிகளின் அடாவடித்தனம் என்று பலரும் தங்களது குமுறலைவெளியிட்டனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |