மோசடி மன்னன் வரதராஜுலு மீது சிபிஐ மேலும் 12 வழக்குகள்
சென்னை:
இந்தியன் வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு தலைமறைவாகி கடந்த மாதம் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்வரதராஜுலு மீது ரூ. 209 கோடி மோசடி செய்ததாக மேலும் 12 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வரதராஜுலு, இந்தியன் வங்கியில், பல நூறு கோடி ரூபாய் கடனாகப் பெற்று விட்டுதலைமறைவாகி விட்டார். இவரது மோசடியால் வங்கியே சீர்குலைந்தது.
இந்த வழக்கில்தான் முன்பு வங்கியின் நிர்வாக இயக்குனர் எம்.கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில், வரதராஜுலு மீது மேலும் 12 வழக்குகளை சிபிஐயின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு தொடர்ந்துள்ளது. ரூ.209 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக வரதராஜுலு மீது மொத்தமாக 12 வழக்குகளை சிபிஐ தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக இன்று எழும்பூர் பொருளாதாரத் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் வரதராஜுலு ஆஜர்படுத்தப்பட்டார். அவரைவரும் 17ம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார்.
மேலும், வரதராஜுலு தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையும் அன்றே நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்தார்.இதைத் தொடர்ந்து மீண்டும் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் வரதராஜுலு.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |