• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

என்னுடைய சாதனைகளை இதயம் உள்ள எவராலும் மறுக்க முடியாது- ஜெயலலிதா

By Staff
|

சென்னை:

Jayalalithaதமிழ்நாட்டில் 40 ஆண்டு கால சாதனைகளை 4 ஆண்டுகளில் செய்திருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் விபரம்:

நானிலம் போற்றும் நமது நல்லாட்சி 4 ஆண்டுகளை கடந்து 5ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. நடந்து சென்ற ஆண்டுகள்நான்கு. ஆனால் நாம் நடத்தி முடித்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கை நானூறா, நாலாயிரமா, யார் அதனை எண்ணிச் சொல்லமுடியும்?

தமிழகத்தில் 40 ஆண்டு கால சாதனைகளை நான்கே ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம். புரட்சித் தலைவரின் பொற்காலஆட்சியை மக்கள் துணையோடு 2001ல் நிறுவினோம். எத்தனை துறைகள் உண்டோ அத்தனை துறைகளிலும் முத்திரைபதித்தோம்.

சுனாமியால் தாக்கப்பட்டு சுருண்டு போன நாடுகள் நிவாரண நடவடிக்கைகளை செய்யத் தொடங்கும் முன்னரே நாம் மீட்புப்பணிகளை முடித்திருந்தோம். சுனாமியின் வேகத்தை விட நமது வேகம் அதிகம் என்பதை சுற்றியுள்ள நாடுகள் உணர்ந்துபாராட்டிய போது உள்ளூர்க் காக்கைகள் அதை ஒப்பாமல் குறை கூறிக் கரைந்து கொண்டிருந்தன.

நான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து சென்று பார்வையிட்டு உடனடியாக உதவிகளை வழங்கினேன். ஆனால்இன்று வரை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பாராத தலைவர், தன்னை தமிழினத்துக்கே தலைவர் என்று சொல்லிக்கொள்கிற அவலம் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் பணத்தை வசூலித்து தமிழக மக்களுக்கு உதவாமல் சேகரித்த பணத்தை டில்லிக்கு கொடுத்த தலைவர், 4 முறைதமிழக முதல்வராக இருந்தவர் என்பது எவ்வளவு கேவலமான செய்தி.

சட்டசபைக்கு வராத தலைவர்:

உலகத்தை சுருட்டி உலையிலே போடுகிற தலைவர், தனக்கும் தன் குடும்பத்துக்கும் பயன் தருகிற காரியங்களை மட்டுமே செய்துபழக்கப்பட்டவர் என்பதை உணராத மக்களும் இன்று உணரத் தொடங்கி விட்டார்கள்.

சட்டசபைக்கு வராத சாதனையை செய்கிற தலைவர், சட்டசபைக்கு வந்து சண்டித்தனம் செய்வதில் சாதனை படைக்கிறசின்னத்தலைவர்கள், இவர்களுக்கு நமது சாதனைகள் எப்படிப் புரியும்? புரிந்தாலும் ஒப்புக் கொள்ளத்தான் மனம் வருமா?

2001ல் தமிழக முதலமைச்சராக நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதல் இதுவரை ஆற்றியிருக்கும் சாதனைகளை இதயம்இருப்பவர் எவராலும் மறுக்க முடியாது. காலியான கஜானா, கடன் சுமைகள், கொடுக்க வேண்டிய தொகைகளை உடனடியாககொடுத்தே தீரவேண்டிய நிர்பந்தம் இவையெல்லாம் நமக்கு முன் ஆட்சி செய்த திமுக அரசு நமக்கு வழங்கி விட்டுப் போனவன்கொடுமைகள்.

எதையும் சவாலாக எடுத்துக் கொண்டு லட்சியத்தில் வெற்றி அடையும் உங்கள் தலைமை, சூழ்ச்சிகளை தொலைத்துக் கட்டிவளர்ச்சிப் பணிகளில் வரலாற்றுச் சாதனை படைத்தது. நாற்பது ஆண்டுச் சாதனைகளை நான்கே ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டியஅற்புதம் இந்த நாட்டில் அதுவும் தமிழகத்தில் நடந்தது.

அமைதிப் பூங்கா:

நமது சாதனைகள் ஏராளம்! நாம் மக்களுக்கு வழங்கிய உதவிகளும் தாராளம்! இன்றைக்கு தமிழகம் அமைதிப் பூங்காவாகவிளங்குகிறது என்றால் அதற்கு காரணம் நமது அணுகுமுறை தான். சாதி, சமய வேறுபாடு இல்லாமல் சகல மக்களையும் சரி நிகர்சமானமாக மதிக்கும் நமது மனப்பான்மை தான் காரணம்.

ஏழை, எளிய மக்களின் அரசு நமது அரசு. எனவே தான் 1 கோடியே 11 லட்சம் பெண்களுக்கு இலவச சேலையும், அதேஎண்ணிக்கையில் ஆண்களுக்கு இலவச வேட்டியும் வழங்கியிருக்கிறோம்.

விவசாயத்திற்கும், குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் அளித்து வருகிறோம். வீடுகளுக்கான மின் கட்டணத்தை வெகுவாககுறைத்திருக்கிறோம். இதுவரை குடும்ப அட்டை இல்லாத 37 லட்சம் குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கியுள்ளோம்.

இப்படி எண்ணிலடங்கா சாதனைகள் பல. மக்களின் விருப்பமே என் விருப்பம், நம் விருப்பம். ஜனநாயகத்தின் இறுதிஎஜமானர்கள் மக்களே. அந்த மக்களின் நலனே நமது குறிக்கோள். குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதிஎன்றார் பாரதியார்.

அந்த வைர வரிகளுக்கு இலக்கணமாக வரலாறு படைத்து வருகிறது நமது அரசு! மக்களின் பேராதரவோடு இந்த மகத்தானபணியை தொடர்வோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X