For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசியாவில் தமிழக தொழிலாளர்கள் தர்ணா!

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்:

சென்னையில் உள்ள ஏஜென்டு மூலம் மலேசியாவுக்கு வேலைக்காக அனுப்பப்பட்டு ஏமாற்றப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 130தொழிலாளர்கள், கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அஜீத் வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம், கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்டோர் மலேசியாவுக்குவேலைக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒவ்வாருவரும் ரூ. 50,000 முதல் 80,000 வரை கொடுத்து மலேசியா சென்றுள்ளனர். இந்திய மதிப்பில் மாதம் ரூ. 10,000 வரை சம்பளம்கிடைக்கும் என்று கூறி இவர்கள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது.

அவர்களுக்கு வேலை தந்த நிறுவனம் ரூ. 1,000 மட்டுமே சம்பளமாக கொடுத்துள்ளது.

வேலைக்குச் சேர்ந்த தமிழர்களின் பாஸ்போர்ட்டுகளை நிறுவன உரிமையாளர் வாங்கி வைத்துக் கொண்டார். மலேசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள ஜோகார் என்ற இடத்தில் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தங்களது நிலை மோசமாகி வருவதை உணர்ந்த 130 பேரும் கோலாலம்பூர் வந்தனர். அங்குள்ள இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்குதித்தனர். தங்களுக்கு முறையான ஊதியம் பெற்றுத் தர வேண்டும், பாஸ்போர்ட்டுகளை வாங்கிக் கொடுக்க வேண்டும், தங்களைசென்னைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஏஜென்டிடம் பேச இந்தியத் துணைத் தூதரக துணைஅதிகாரி சஞ்சய் பாண்டா முயற்சித்தார். ஆனால் அந்த நபரைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து நடைபாதையில் இரவு, பகலாகஉட்கார்ந்திருந்த 130 பேரும் தங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

கோலாலம்பூரில் தவித்து வரும் 130 பேரையும் சென்னைக்குத் திருப்பி அனுப்ப இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாகதெரிகிறது.

முன்பெல்லாம் தமிழர்கள் இது போன்ற சிரமத்துக்குள்ளானால் மலேசியா உள்பட பிற நாடுகளில் உள்ள இந்தியத் தூதரங்கள் இன்னொருபக்கம் திரும்பி நின்று கொள்வது வழக்கம்.

ஆனால், சமீபகாலமாக இது போன்ற விவகாரங்களை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதில் திமுக, அதிமுக, மதிமுகதலைவர்களிடையே பெரும் போட்டி நிலவுவதாலும் மத்திய ஆட்சியில் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து பங்கு வகிக்கஆரம்பித்துவிட்டதாலும் தூதரங்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X