புகைக்க தடை: ரஜினி வரவேற்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திரைப்படங்களில் சிகரெட்பிடிப்பது போன்ற காட்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்புதெரிவித்துள்ளார். இருப்பினும் திரைத் துறையினரில் பெரும்பாலோர் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறத் தடை விதிப்பதாகவும், வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்ததடை அமலுக்கு வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதற்குத் திரைத் துறையினர் மத்தியில் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பெரும்பாலானவர்கள், சிகரெட் தயாரிப்புக்கும்,விற்பனைக்கும் முதலில் தடை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். சிகரெட் தயாரிப்பை ஊக்கப்படுத்தி விட்டு,அதை விற்கவும் அனுமதித்து விட்டு, புகை பிடிக்கக் கூடாது என்று மட்டும் கூறுவது நியாயமற்ற ஒன்று என்று அவர்கள்கூறுகிறார்கள்.

இதுகுறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், எனது காட்பாதர் படத்தில் ரூ. 2 கோடி செட் போட்டு ஒரு காட்சியைஎடுத்துள்ளோம். அதில் அஜீத் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி வருகிறது. இப்போது அந்தக் காட்சியை எப்படி நாங்கள் நீக்கமுடியும்? காட்சியிலிருந்து சிகரெட்டை மட்டும் எப்படி நீக்க முடியும்? அல்லது திரும்ப செட் போட்ட காட்சியை படம் பிடிக்க 2கோடியை யார் தருவார்கள்?

சிகரெட் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றை மட்டும் மத்தியஅரசு அனுமதித்து விட்டு, சிகெரட் பிடிக்க தடை விதித்திருப்பது,குறிப்பாக சினிமாவில் தடை செய்திருப்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத விஷயம் என்கிறார் ரவிக்குமார்.

இதேபோல நடிகை குஷ்புவும், இத்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிகரெட் உடல் நலனுக்கு கேடு என்பதில் யாருக்கும்மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதேமத்திய அரசு, சிகரெட் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் தடை விதிக்காத போது,பொதுமக்கள் சிகரெட் பிடிப்பதை முழுமையாக தடுக்க முடியாத போது, சினிமாவில் மட்டும் எப்படி தடை செய்யலாம், இது எந்தவிதத்தில் நியாயம் என்று கேட்டுள்ளார்.

இருப்பினும், இந்த சிகரெட் தடை யாரை மனதில் வைத்து கொண்டு வரப்பட்டதோ அந்த முக்கிய நபர், சிகரெட் பிடிக்கத் தடைவிதித்திருப்பதை வரவேற்றார். அவர் வேறு யாருமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். சிகரெட் தடை குறித்து அவரிடம்கேட்டபோது, நல்லதுதான், வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார் ரஜினி.

சிகெரட் பிடிக்கத் தடை விதித்திருப்பது கோலிவுட்டில் மட்டுமல்லாது மும்பை திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது. அதில் நடிக்கும் முக்கால்வாசி நடிகர்கள் வாயில் புகையுடன் தான் பெரும்பாலான காட்சிகளில் வருவார்கள்.

உடல் நலனுக்கு கேடு என்றால் அந்த சிகரெட்டை முழுவதுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சினிமாத்துறையினர் மீது மட்டும் நடவடிககை எடுப்பது சரியல்ல என்ற கருத்து அங்கும் பரவியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+