For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழக்குகளுக்கு அஞ்சுபவன் அல்ல நான்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

என் மீது வழக்கு போடப்போவதாக மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நான் மட்டுமல்ல, என்னுடைய இயக்கத்தில் இருக்கும்யாரும் அஞ்சமாட்டோம் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 82 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை அண்ணாநகரில் நேற்று இரவு நடந்தது.

இதில் கருணாநிதி பேசுகையில், தமிழகத்தில் காங்கிரசிற்கு ஒரு ஆசை இருக்கிறது. காமராஜர் ஆட்சி வேண்டும், வேண்டும் என்றுகூறுகிறார்கள். நான் அந்த ஆட்சியை ரங்கசாமி மூலமாக புதுச்சேரியில் காண்கிறேன்.

இங்கே காமராஜர் ஆட்சி ஏற்படாவிட்டாலும், புதுச்சேரியில் காமராஜர் ஆட்சி உள்ளது என்று அவர்கள் திருப்தியடைவார்கள் எனநம்புகிறேன். அவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ நான் நம்புகிறேன்.

காமராஜரிடம் இருக்கும் எளிமை, அடக்கம், பண்பு, மற்றவர்களை மதிக்கும் தன்மை ஆகிய குணங்களை ரங்கசாமியிடம்என்னால் காண முடிகிறது.

அவரும், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தமிழகம் தூண்டுகோல் என்றுவெளிப்படையாக கூறினார்கள். தமிழக மக்களுக்கு வெளிப்படையாக நன்றி உணர்வுடன் தெரிவித்தனர். அதனால்மகிழ்ச்சியடைகிறேன்.

அ.தி.மு.க., ஆட்சியில் நீதிமன்றத்தில் நியாயமான கருத்துக்கள் கூட மதிக்கப்படுவதில்லை. நீதிமன்றங்களும், நீதிபதிகளும் கால்தூசிக்கு சமமாக மதிக்கப்படுகிறார்கள்.

பிறந்த நாள் விழாவில் ஏன் அ.தி.மு.க.,வை குறைகூறி பேச வேண்டும், நீதித்துறையை இப்படியா பேசுவது என நடுநிலைபத்திரிகைகள் திடீர் அக்கறை கொண்டு செய்தி போடக்கூடும்.

பொங்கலுக்கு முதல்நாள் போகி கொண்டாடுகிறோம். வீட்டில் உள்ள அழுக்குகளை அகற்றுவதற்காக. அதுபோல இந்த விழாநடக்கும்போது இதற்கு முன்பு இருக்கும் அழுக்குகளை அகற்ற வேண்டும் என்பதற்காக இதுபோன்று பலர் கருத்துக்களைத்தெரிவித்தார்கள்.

மேம்பால ஊழல் வழக்கு:

மேம்பால ஊழல் வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒன்றும் செய்யாதவர்கள் இப்போது ஏன் அவசர அவசரமாகசெயல்படுகிறார்கள். தமிழகத்தில் உள்ள பத்திரிகைகள் மட்டுமின்றி, வடமாநில பத்திரிகைகளிலும் மேம்பால ஊழல் பற்றிவிளம்பரம் வருகிறது.

இதிலிருந்து வெகு விரைவில் அடுத்த சட்டசபை பொதுத் தேர்தல் வரும் காரணத்தால் மக்களை திசை திருப்ப இந்த வழக்கைபூச்சாண்டி காட்டுகிறார்கள். அந்தக் காலத்தில் பாதுகாப்பு சட்டப்படி என் மீது போடப்பட்ட வழக்கையே நான் சந்தித்தவன்.இதைக் கண்டு நானோ எங்களது இயக்கத்தில் இருப்பவர்களோ அஞ்சமாட்டோம் என்றார் கருணாநிதி.

கூட்டத்தில் கலந்து கொண்ட பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுகையில், கருணாநிதியின் ஆசியுடன் பாண்டிச்சேரியில் நான்ஆட்சி நடத்தி வருகிறேன். எதிர்கட்சித் தலைவரிடம், தம்பி நல்லாட்சி செய்கிறானே என கருணாநிதி அடிக்கடி கேட்பதுண்டு.

மாற்றான் தோட்டத்து மலர்களுக்கும் மணமுண்டு என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில், என் ஆட்சி பற்றி கருணாநிதிஅடிக்கடி விசாரிப்பார்.

திமுக எம்.எல்.ஏ.க்கள் எனக்கு நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். கருணாநிதியின் கட்டளை தான் அதற்கு காரணம் என்று எனக்குதெரியும்.

நான் காங்கிரஸ்காரன். காமராஜர் வழியைப் பின்பற்றுபவன். ஆனாலும் கருணாநிதியை எனக்குப் பிடிக்கும். அவரது தமிழ்எனக்கு பிடிக்கும். மத்தியில் காங்கிரசின் நல்லாட்சி நடக்க கருணாநிதி முக்கிய காரணகர்த்தாவாக இருந்து வருகிறார் என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பேசுகையில், கருணாநிதி 67 ஆண்டுகள் அரசியலில் தனக்கெனதனி இடத்தை பிடித்தவர்.நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு நண்பர்களுக்கு நல்ல நண்பர்கள் எதிரிகளுக்கு பயங்கர எதிரி எனகருணாநிதி பற்றி இந்திராகாந்தி கூறினார்.

அரசியலில் நிறைய பேர் வருவார்கள். நிறைய பேர் போவார்கள், ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் நிரந்தரமான இடத்தைபிடித்துள்ளவர் கருணாநிதி. சோனியாவை பிரதமராக்குவோம் என்ற கோஷத்தை முதலில் எழுப்பியவர் கருணாநிதி தான்.

அதனால் தான் பாஜக ஆட்சியை வீழ்த்த முடிந்தது. தி.மு.க., ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.எதிர்காலத்தில் தனி மெஜாரிட்டியுடன் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.

பாஜக போன்ற மதவாத கட்சிகளைத் தோற்கடித்து மதநல்லிணக்கத்தை தி.மு.க., வளர்த்து வருகிறது. கருணாநிதியின்தலைமையில் தமிழகத்தில் விரைவில் நல்லாட்சி வர வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X