For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. வைத்த ஆப்பு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்துள்ளதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான கோச்சிங் சென்டர்கள் எனப்படும் நுழைவுத் தேர்வு பயிற்சிமையங்களுக்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே மூலை டுக்கெல்லாம் கோச்சிங் சென்டர்கள் தொடங்கப்பட்டு விடும். கார் ஷெட்டில், கல்யாணமண்டபத்தில் என கிடைக்கிற இடத்தில் பேனர்களைக் கட்டி இங்கே பயிற்சி எடுத்துக் கொண்டால் நீங்கள் நிச்சயம் என்ஜீனியர் ஆவது உறுதி, டாக்டர் ஆவது உறுதிஎன்ற பிரசார வாசகங்களுடன் களை கட்டும் கோச்சிங் சென்டர்களின் பிசினஸ்.

பத்திரிக்கைகளில், டிவிக்களில் விளம்பரம். போஸ்டர்கள் மூலம் பேனர்கள் மூலம் விளம்பரம் எல்லாம் செய்வார்கள். இப்படி ஆரம்பிக்கப்படும் கோச்சிங் சென்டர்களில்முக்கால்வாசி மையங்கள் வெறும் டுபாக்கூர் மையங்கள். மாணவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் நடத்தப்படுபவை.

மேலும் ஜாதிச் சங்கங்களின் சார்பில் ஜாதிக்கொரு கோச்சிங் சென்டர்கள் நடத்தப்படுவதும் உண்டு.

20 பேர் உட்காரக் கூடிய அறையில் அடிப்படை வசதி கூட இல்லாமல் 50 பேரை அடைத்து வைத்து ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடக்கும். இதில் இரவு நேர ஷிப்ட்டும்உண்டு. இந்த ஷிப்ட்டில் வரும் மாணவர்கள், கூட்ட நெருக்கடியோடு கொசுக்கடியையும் சேர்த்து அனுபவிப்பது வழக்கம்.

ஒவ்வொரு மாணவரும் ரூ. 5,000 வரை இந்த பயிற்சி மையங்களுக்கு கட்டணமாக கட்டி படித்து வந்தனர்.

முன்பெல்லாம், ஐ.ஏ.எஸ். போன்றவற்றிற்கான கோச்சிங் மையங்களே, நுழைவுத் தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்தன. இவற்றில் கட்டணங்களும் அதிகம்வசூலிக்கப்படவில்லை. நேர்மையான வகுப்புகள் நடந்தன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பிளஸ் டூ நுழைவுத் தேர்வுக்காகவே தனியாக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்ட பிறகுதான் பண வசூல் களை கட்டியது.

இப்போது இந்த நிறுவனங்களின் தலையில் இடி விழுந்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பினால் தங்களது பிழைப்பில் மண் விழுந்து விட்டதாகவே அவர்கள்புலம்புகின்றனர்.

சுப்ரமணி கமிட்டிக்கு மூடுவிழா:

இதற்கிடையே, தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நிரந்தரக் கமிட்டியின் தலைவரான நீதிபதி சுப்பிரமணி, நுழைவுத்தேர்வு முறை ரத்தாகியுள்ளதன் மூலம், இனிமேல் எனக்கு வேலையில்லை என்று கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான சுப்பிரமணியைத் தலைவராகக் கொண்ட இந்தக் கமிட்டியை தமிழக அரசு கடந்த ஆண்டு ஏற்படுத்தியது.

இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு குறித்து முடிவு செய்ய சுப்பிரமணி கமிட்டி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் நுழைவுத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால், சுப்ரமணி கமிட்டியின் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நீதிபதி சுப்பிரமணி கூறுகையில், இனி எனக்கோ, கமிட்டிக்கோ அவசியமில்லை, வேலையில்லை. நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு முழுஅதிகாரம் உள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றமே முன்பு தீர்ப்பு வழங்கியுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X