For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ் எரிப்பு வழக்கு: சன், ஜெயா டிவி வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

தர்மபுரி பேருந்து எரிக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய சன் டிவி மற்றும் ஜெயா டிவிசார்பில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் சேலம் நீதிமன்றத்தில் போட்டுக்காட்டப்பட்டன.

தர்மபுரியில் விவசாய பல்கலைக்கழக பேருந்து எரிக்கப்பட்டு அதில் 3 மாணவிகள்உயிரோடு எரிந்து பலியானது தொர்பான வழக்கு சேலம் கூடுதல் செஷன்ஸ்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று (வியாழக்கிழமை) முக்கிய விசாரணை நடைபெற்றது. பேருந்துஎரிக்கப்பட்டபோது, சன் மற்றும் ஜெயா டிவி சார்பில் படமாக்கப்பட்ட காட்சிகள்நீதிமன்றத்தில் போட்டுக் காட்டப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணைநடைபெற்றது.

முதலில் ஜெயா டிவி எடுத்த வீடியோ பதிவு போட்டுக் காட்டப்பட்டது. ஜெயாடிவிக்காக இந்தக் காட்சிகளைப் பதிவு செய்த தர்மபுரியைச் சேர்ந்த தனியார் வீடியோகிராபர் மருதுவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயா டிவி வீடியோ காட்சிகள் விவரம்: முதல் காட்சி: தர்மபுரி இலக்கியம்பட்டிபகுதியில் சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் அதிமுகவினர் திரளாக கூடி சாலைமறியல் செய்கின்றனர். அவர்களது கைகளில் அதிமுக கொடிகள் உள்ளன.

தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன் (பஸ் எரிப்பு வழக்கில் முக்கியக்குற்றவாளி) தலைமையில் இவர்கள் மறியல் செய்கின்றனர். ஜெயலலிதா வாழ்க,கருணாநிதி ஒழிக என்று ராஜேந்திரன் கோஷமிட மற்றவர்களும் அவ்வாறுகோஷமிடுகின்றனர்.

2வது காட்சி: தர்மபுரியில் வெற்றிவேல் என்பவரது தலைமையில் அதிமுகவினர்போராட்டம். 3வது காட்சி: மீண்டும் இலக்கியம்பட்டி காட்டப்படுகிறது. ராஜேந்திரன்தலைமையிலான போராட்டத்தில் தொண்டர் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து அவர்கள் கோஷமிடுகிறார்கள்.தாக்கப்பட்டு சேதமடைந்த 2 நகரப் பேருந்துகள் காட்டப்பபடுகின்றன. அவற்றில்ஒரு பேருந்து மீது தொண்டர் ஒருவர் பெரிய மரக் கட்டையை எடுத்து சரமாரியாகஅடிக்கிறார்.

4வது காட்சி: விவசாயப் பல்கலைக்கழக பேருந்து தீவைக்கப்பட்டு கொளுந்து விட்டுஎரிகிறது. தீயில் சிக்கிக் கொண்ட மாணவ, மாணவிகளை சக மாணவர்கள் மீட்கும்காட்சி. ஜன்னலை உடைத்துக் கொண்டு 3 மாணவிகள் சாலையில் விழுகின்றனர்.

முழு பேருந்தையும் கரும்புகை சூழ்ந்து கொண்டுள்ளது. பீதியுடன் மாணவ,மாணவியர் பதறியடித்து ஓடுகின்றனர். இந்தக் காட்சிகள் காட்டப்பட்ட பிறகுமருதுவிடம், வீடியோ பதிவில் பார்த்த யாராவது இங்கே இருக்கிறார்களா என்றுஅடையாளம் காட்டுமாறு நீதிபதி கிருஷ்ணராஜா உத்தரவிட்டார்.

முதலில் ராஜேந்திரனை மட்டும் மருது அடையாளம் காட்டினார். ஆனால் நீதிபதி,உண்மையை மட்டுமே பேச வேண்டும். வேறு யாரையாவது தெரியுமா என்றுஅடையாளம் காட்டுங்கள் என்று கண்டிப்புடன் கூறவே மேலும் 3 பேரையும், சாலைமறியல் போராட்டத்தை புகைப்படம் எடுக்கக் கேட்டுக் கொண்ட தெளலத் பாட்ஷாஎன்பவரையும் மருது அடையாளம் காட்டினார்.

ஜெயா டிவி செய்தி ஆசிரியரிடம் விசாரணை:

அதன் பின்னர் ஜெயா டிவி செய்தி ஆசிரியர் கே.பி.சுனிலிடம் விசாரணை நடந்தது.அரசு வழக்கறிஞர் சீனிவாசன் அவரிடம், இந்த வீடியோ பதிவு அடங்கிய கேசட்எப்போது உங்களுக்கு வந்தது என்று கேட்டார்.

அதற்கு சுனில், தர்மபுரி செய்தியாளர்சீனிவாசன் இதை எங்களுக்கு அனுப்பினார்.இன்னொருவர் மூலம் இந்த கேசட்டை சீனிவாசன் பெற்றார். 2003ம் ஆண்டுபிப்ரவரி 3ம் தேதி இந்த கேசட்டை நாங்கள் பெற்றோம். இதில் ஒரு பகுதியைமட்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினோம் என்றார்.

பின்னர் சன் டிவியின் வீடியோ பதிவுகள் போட்டுக் காட்டப்பட்டன. சன் டிவிக்காகஇந்த வீடியோவை எடுத்த தனியார் வீடியோகிராபர் தினேஷ்குமாரிடம் விசாரணைநடத்தப்பட்டது. அதேபோல ஜெயா டிவி நிருபர் சீனிவாசனிடமும் விசாரணைநடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து பலியான மாணவி ஹேமலதாவின் தந்தை கேசவசந்திரனிடம்விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை ஜூன் 27ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.

பேருந்து எரிப்பு சம்பவத்தில், துரதிர்ஷ்டவசமாக பேருந்துக்கு தீ வைக்கப்பட்டபோதுஅதை எந்தப் பத்திரிக்கையாளரும் நேரில் பார்க்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X