அத்வானி Vs
டெல்லி:
வரும் 21ம் தேதி சென்னையில் தொடங்க இருந்த பாஜவின் மூன்று நாள் செயற்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தக்கூட்டம் செப்டம்பர் மாதத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு அத்வானி பல முறை சென்று சமாதானப் பேச்சு நடத்திப் பார்த்தார். அதேபோல ஆர்எஸ்எஸ் தலைவர்களும் பாஜக தலைமையகத்துக்கு வந்து சென்றனர்.
இப்படியாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சந்தித்து வந்தாலும், ஜின்னாவைப் புகழ்ந்த அத்வானியிடம் இருந்து ஏதாவதுஒரு பதவியையாவது பறிக்க ஆர்எஸ்எஸ் தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால், பதவி விலக அத்வானி மறுத்து வருகிறார். இந் நிலையில் ஏதாவது ஒரு பதவியை விட்டு அத்வானி விலகுவார் எனமாஜி பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். இந்த குழப்பமான சூழ்நிலையில் வரும் 21ம் தேதி முதல் சென்னை அருகே அக் கட்சியின்தேசிய செயற்குழுக் கூட்டம் கூட இருந்தது.
இக் கூட்டத்தின் செலவுக்காக திருநாவுக்கரசரும் கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணனும் தான் அதிக அளவில் நிதி திரட்டித்தந்துள்ளனர். பெரும் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டம் திட்டமிட்டபடி 21ம் தேதி நடக்குமா என்பதில் சந்தேகம்ஏற்பட்டது.
கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என வெங்கையா நாயுடு போன்றவர்கள் கூறி வந்தனர். ஆனால், முதலில் கட்சியின்கொள்கை முடிவுகளை இறுதி செய்ய வேண்டும் என பங்காரு லட்சுமணன், ஜனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறி வருகின்றனர்.
அத்வானி முதலில் பதவியை விட்டு விலக வேண்டும் என மூத்த தலைவரான மதன்லால் குரானா கூறியுள்ளார்.
இவர்களை மீறி திட்டமிட்டபடி 21ம் தேதி செயற்குழுவைக் கூட்டினால், அதிலும் அத்வானி எதிர்ப்புக் குரல்கள் எழுந்தால்என்ன செய்வது என்ற குழப்பத்தில் பாஜக இருந்தது. இதனால் சென்னை செயற்குழக் கூட்டத்தையே அப்படியே கிடப்பில்போட்டுவிடலாம் என அத்வானி ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.
இந் நிலையில் பாஜக உயர் மட்டக் குழுக் கூட்டம் டெல்லியில் மாஜி பிரதமர் வாஜ்பாய் வீட்டில் நடந்தது. அப்போதுசென்னையில் வரும் 21ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுவதாக இருந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தை ரத்துசெய்வது. அதை செப்டம்பரில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால், வரும் 21ம் தேதி தொடங்குவதாக இருந்த தேசிய செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.(நாடாளுமன்றக் கூட்டம் நடப்பது பாஜகவுக்கு இப்போது தான் தெரியுமோ?).
செப்டம்பர் 16 முதல் 18ம் தேதி வரை இக்கூட்டம் சென்னையில் நடைபெறும். பாஜக தலைவர் பதவியிலும், மக்களவைஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலும் அத்வானியே தொடர்ந்து நீடிப்பார். அதில் மாற்றம் இல்லை என்றார் மல்ஹோத்ரா.
இதற்கிடையே அத்வானி பதவி விலக வேண்டும் என கோரிய மூத்த பாஜக தலைவர் மதன்லால் குரானா மீது கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |