நியூ படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை; எஸ்.ஜே. சூர்யாவுக்கு கண்டனம்!
சென்னை:
![]() |
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தயாரித்து, இயக்கி, நடித்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நியூ படம் ஆபாசம்நிறைந்திருப்பதாக கூறி அப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
படத்தைத் திரையிடவும் தடை விதித்துள்ளது.
இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக அறிமுகமாகிய படம் நியூ. கடந்த வருடம் வெளியான இப்படத்தில் ஏராளமான ஆபாசக்காட்சிகளும், இரட்டை அர்த்தம் தொணிக்கும் வசனங்களும் இடம் பெற்றிருப்பதாக பெண்கள் அமைப்புகள் குற்றம் சாட்டின.
இந்தப் படத்திற்கு முதலில் சென்னையிலுள்ள சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை சென்சார் போர்டிலிருந்த ஒரு பெண்அதிகாரி, நியூ படத்தில் ஆபாசம் நிறைந்திருப்பதாக கூறி தணிக்கை சான்றிதழ் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண் அதிகாரி மீது கோபத்தில் எஸ்.ஜே. சூர்யா செல்போனை வீசி எறிந்தார் என்று போலீஸில் புகார்கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தனது படத்திற்கு மும்பை சென்று அங்குள்ள சென்சார் போர்டிடம் சூர்யா அனுமதி பெற்று வந்தார். இதையடுத்துபடம் வெளியானது.
படத்தைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. இந் நிலையில், பெண் வழக்கறிஞர்அருள்மொழி, நியூ படத்தில் ஆபாசமான, அறுவறுக்கத்தக்க காட்சிகள் ஏராளமாக இருப்பதாகவும், எனவே படத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இப்படிப்பட்ட ஒரு படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. இவ்வளவு ஆபாசகாட்சிகள், வசனங்களுடன் இப்படத்தைத் திரையிட்டது கலாச்சாரம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.
இப்படத்திற்குக் கொடுத்த தணிக்கை வாரிய சான்றிதழை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற ஒரு படத்தைஎடுத்துள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
படத்தில் தணிக்கை வாரியம் அனுமதிக்காத சில காட்சிகளை சுவரொட்டிகளில் அவர் பயன்படுத்தியுள்ளதும் கடுமையாககண்டிக்கத்தக்கது.
அனுமதி பெறாத காட்சிகளை சுவரொட்டிகளில் பயன்படுத்தியது மற்றும் தணிக்கை வாரிய பெண் உறுப்பினர் மீதுசெல்போனை வீசி அவமானப்படுத்தியது தொடர்பாக சூர்யா மீது உள்ள 2 புகார்களையும் காவல் துறையினர் விரைவாகவிசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
நியூ படம் வெளியாகி, பெரும் வெற்றியையும், வசூலையும் வாரிக் குவித்து, "அ ஆ என்ற தனது அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யா தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவரப் போகும் நிலையில், நியூ படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |