ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று காலை வெகு சிறப்பாக நடந்தேறியது.
அதிகாலை 5.30 மணியளவில் ஆண்டாள், ரங்க மன்னாருக்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் காலை 7.15 மணிக்கு ஆண்டாளும், ரங்க மன்னாரும் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்தனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக கடவுளர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானபக்தர்கள் கலந்து கொண்டனர். இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.சி.ராமசாமி, விளையாட்டுத் துறை அமைச்சர் இன்பத்தமிழன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், கோபாலா கோவிந்தா என்று கோஷமிட்டு ஆண்டாளையும், ரங்க மன்னாரையும்வழிபட்டனர்.
தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ளூர் விடுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தென் மாவட்டங்கள்பலவற்றிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பேருந்துகளும் விடப்பட்டிருந்தன.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |